பயனர்:Yokesh2211179/மணல்தொட்டி
முன்னுரை :
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால் இன்றோ கூடி வாழ்ந்தால் கோடி இன்னல் என்று நினைக்கிறார்கள். தனிக் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ ஆசைப்படுகிறார்கள். கூட்டுக் குடும்பம் என்பது இக்காலத்தில் அரிதிலும் அரிதாகி விட்டது. அதன் பின்விளைவுகளை இன்று நாம் பல விதத்தில் காண முடிகிறது. அன்பு, பாசம், நேசம் யாவற்றிலிருந்தும் சிறிது சிறிதாக விலகி தூரமாக்கப்பட்டு விடுகிறோம்.கூட்டுக் குடும்பதைப் பற்றியும் அதன் பயன்களைப் பற்றியும் இங்கு காண்போம்.
கூட்டுக் குடும்பத்தின் குணம் :
முன்பொரு காலத்தில் அநேக குடும்பங்கள் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வந்தன.கூட்டுக் குடும்பங்களில் சிறு சிறு பிரச்சனைகள் வரத்தான் செய்யும். இல்லை என்று சொல்ல முடியாது, ஆனால் பெரிய அளவில் பாதிப்புகள் வராது. வந்து மறையும் பிரச்சனைகளாகத்தான் இருக்கும், கூட்டுக்குடும்பம் நம் வாழ்வில் எத்தனையோ விதத்தில் பயனுள்ளதாகவும் பலமாகவும் இருந்திருக்கிறது. கூட்டுக் குடும்பமாய் வாழ்வது நம் உடமைக்கும் பொருளுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் பாதுகாப்பாக இருக்கும் என்பது உண்மை.
பயன்களும் பாசமும் :
அது மட்டுமின்றி, கூட்டுக் குடும்பத்தில் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்து கொள்ள முடிந்தது. ஒரு நிகழ்ச்சியானாலும் ஒரு பிரச்சனையானாலும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்க வாய்ப்பிருந்தது. சமையல் எல்லோருக்கும் சேர்த்து ஒரே சமையலாய் இருந்ததால் வீண்விரயம் ஆகாமல் இருந்தது. செலவினங்களும் குறைந்தது. ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் காப்பாற்ற, உதவி செய்ய ஆள் இருந்தது. குழந்தைகளைப் பராமரித்துப் பாசம் காட்ட தாத்தா, பாட்டி இருப்பார்கள். கொஞ்சிப்பேசி மகிழ்ந்து விளையாட தாய்மாமன் இருப்பார். தூக்கி அணைத்து தூரத்து நிலாவைக் காண்பித்து அழுகையை நிறுத்த அத்தை இருப்பாள். இப்படி அந்தக் குழந்தை பாசத்துடன் வளர பேருதவியாக அனைவரும் இருப்பர். ஒரு தலைமைக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கமாக, கண்ணியமாக, கௌரவமாக வாழ கூட்டுக் குடும்பம் வழிவகுத்தது. தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன், மச்சான், மனைவி, மக்கள் என்று கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த காலத்தில் குடும்பத்தினரிடையே சுமூகமான நட்புறவும் இருந்தது.
இன்றைய நிலை :
இந்த காலத்தில் கூட்டுக் குடும்பம் என்பது அநேகமாக இல்லை என்று சொல்லும் அளவுக்கு கணிசமாகக் குறைந்து வருகிறது. ஏனெனில் அதிகம் பேர்கள் சேர்ந்திருந்தால் இந்நாளில் கூட்டுக் குடும்பம் என்பது ஒரு கூத்துக் குடும்பமாகிவிடுகிறது! ஆனால் ஒரு சில குறிப்பிட்ட கிராமப்புற இடங்களிலும் மற்றும் சமூகத்தினரிடமும் பெரிய கூட்டுக் குடும்ப வாழ்வு இன்னமும் இருந்து வருகிறது.
காலமும், கோலமும், கருத்தும், விருப்பமும் விரைவாக மாறி வருகின்ற எந்திர யுகத்தில், கூட்டுக் குடும்ப வாழ்க்கையும், அதைத் தழுவிய நடைமுறைகளும் வெகுவாக மாறிவிட்டது! கல்யாணத்திற்குப் பின் அம்மா-அப்பாவிடமிருந்து பிரிந்து, துணையுடன் தனித்து வாழ்வது இந்நாளில் மிகவும் சகஜமாகிவிட்டது. உடன் பிறந்த அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை எல்லோரும் இதே மாதிரி தனித்து சென்றுதான் வாழ்கின்றனர். இதன் விளைவால்தான் நிறைய முதிய பெற்றோர்கள் 'முதியோர் இல்லங்களில்' வாழத் தொடங்கி விட்டனர். பாலூட்டி வளர்த்த அன்னையையும் தோழ் சுமந்து வளர்த்த தந்தையையும் ஆதரவின்றி விட்டுச் சென்று தனியே வாழ்வதின் சுகம் கிடைத்து என்ன பயன்??
இனிமை நிறைந்தது :
கூட்டுக் குடும்பம் ஒரு அழகான நிறுவனம். நம்மில் பெரும்பாலோர் இந்தக் கருத்தைக் கேட்டும் அதை நம்பியும் வளர்ந்தவர்கள். எங்கள் திரைப்படங்கள் கூட்டுக் குடும்பத்தை, நல்ல மற்றும் கெட்ட நேரங்களில் அனைவரும் ஒன்றாகச் சாப்பிடுவது, ஒன்றாகச் சிரிப்பது, ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பது போன்றவற்றைச் சித்தரிக்கிறது. மற்ற சமூக அமைப்பைப் போலவே, கூட்டுக் குடும்ப அமைப்பும் அதன் நன்மைகள் மற்றும் தீமைகளின் பங்கைக் கொண்டுள்ளது. ஆனால், கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவம் இன்னும் பலரால் ஒப்புக் கொள்ளப்படுகிறது. தனிக்குடும்பமாக இருக்கும் இந்தக் காலத்திலும் கூட்டுக்குடும்ப முறை நிலவுகிறது, தொடர்கிறது.
சிறப்பியல்புகள் : குடும்பம் பொதுவாக குடும்பத்தின் மூத்த உறுப்பினரால் வழிநடத்தப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் ஆலோசனைகளை வழங்கலாம் என்றாலும், முடிவுகளை எடுக்கும் பொறுப்பு குடும்பத் தலைவரிடம் உள்ளது.குடும்ப உறுப்பினர்கள் ஒரே சமையலறையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.குடும்பத்தை நடத்துவதற்கு அனைத்து உறுப்பினர்களும் நிதி உதவி செய்ய வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும் மற்றும் ஆதரிக்க வேண்டும், இந்த அமைப்பு அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டிலும் பங்கைக் கொண்டிருக்க வேண்டும்.
தீமைகள் சில : வெளிப்படுத்தும் சுதந்திரம் குறைகிறது
ஒரு தம்பதியினர், குறிப்பாக ஒரு பெண், தனது அறைக்கு வெளியே தனது ஆறுதல் மண்டலத்தைக் கண்டுபிடிப்பதில் சிரமப்படலாம். உணவைத் தேர்ந்தெடுப்பது, வீட்டை அலங்கரிப்பது அல்லது அவளுக்கு வசதியான ஒன்றை அணிவது மற்றும் அவளுடைய அறையை விட்டு வெளியேறுவது போன்ற பல அம்சங்களில் அவள் பேசாமல் இருக்கலாம். சில சமயங்களில், அவளுடைய யோசனைகள் மற்ற குடும்ப உறுப்பினர்களால் நிராகரிக்கப்படலாம்.
தனியுரிமை இல்லாமை
குடும்ப உறுப்பினர்கள் பலர் இருப்பதால், தனியுரிமை மற்றும்/அல்லது ஒன்றாக நேரம் இல்லாதது ஒரு பிரச்சினையாக மாறும். ஒரு குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர் அடிக்கடி பொறுப்புகளுக்கு அழைக்கப்பட்டால், அது திருமண வாழ்க்கையில் ஒற்றுமையை ஏற்படுத்தும். மேலும், ஒரு கூட்டுக் குடும்பத்தில், ஒரு ஜோடி எப்போதும் ஒரு பாராட்டு அல்லது சைகையைப் பரிமாறிக்கொள்ள அல்லது ஒரு விவாதம் அல்லது வாக்குவாதத்தில் ஈடுபட விரும்பும் போது கவனிக்கப்படுவதையும் கேட்கப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நிதியில் கருத்து வேறுபாடு
குடும்பத்தை நடத்துவதற்கான பங்களிப்புகள் மற்றும் பணத்தை எவ்வாறு செலவிட வேண்டும் என்பது கூட்டுக் குடும்பங்களில் ஒரு முக்கிய பிரச்சினையாகும். வீட்டை நடத்துவதற்கு ஒவ்வொருவரும் பணத்தைப் பங்களிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், குடும்பத் தலைவரே நிதியைக் கட்டுப்படுத்தி, பணத்தை எப்படிச் செலவிட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார். சில சமயங்களில், குடும்பத் தலைவர் எடுக்கும் முடிவுகள் சில குடும்ப உறுப்பினர்களுக்குப் பிடிக்காமல், கருத்து வேறுபாடுகள் மற்றும் வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும்.
இந்து பிரிக்கப்படாத குடும்பம் :
கூட்டுக் குடும்பத்தின் பொருத்தம் இந்தியாவில் இந்து பிரிக்கப்படாத குடும்பம் சட்டத்தால் ஆதரிக்கப்படுகிறது. இந்து குடும்பம் ஒன்று கூடி இந்து பிரிக்கப்படாத குடும்பத்தை உருவாக்கலாம் என்று இந்த சட்டம் கூறுகிறது. இருப்பினும், இதன் அனைத்து உறுப்பினர்களும் ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து வந்தவர்களாக இருக்க வேண்டும். மற்ற நன்மைகளுடன், இக்குடும்பம் வரிச் சலுகைகளையும் பெறுகிறது. பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் சீக்கியர்கள் கூட இந்து பிரிக்கப்படாத குடும்பத்தை உருவாக்கலாம்.
முடிவுரை :
உடன் பிறந்தவர்களுடன் உண்மையான அன்பும் பாசமும் கொண்டு , குறிப்பாக, தன் பெற்றோர்களை தனியாக தவிக்கவிடாமல் ஒன்றாக கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்து வாழ வேண்டும். இன்று போல் என்றும் குடும்பமாக விட்டுக்கொடுத்து அன்புடன் வாழ்ந்தால் போதும். நம் நாட்டையும் சரி வீட்டையும் சரி நல்ல முறையில் மேம்படுத்துவோம் .