பயனர் பேச்சு:எஸ்.பி.செந்தில் குமார்/மணல்தொட்டி

விளாச்சேரி பட்டாபிராமர் திருக்கோயில் தொகு

விளாச்சேரி பட்டாபிராமர் திருக்கோயில் என்பது தமிழகத்தின் மதுரை நகரின் விளாச்சேரியில் அமைந்துள்ள தொன்மையான இந்துக் கோவில் ஆகும்.

அமைவிடம் தொகு

மதுரையில் இருந்து 9 கி.மீ. தொலைவில் விளாச்சேரி ஊர் அமைந்துள்ளது. மூலக்கரையிலிருந்து திருநகர் செல்லும் சாலையில் இந்த ஊர் உள்ளது.

பெயர்க் காரணம் தொகு

பட்டாபிராமர் கோயில் என்ற இத்தலம், ராமர் பட்டாபிஷேகம் நடைபெறும் கோலத்தில் அமர்ந்திருப்பதால் இப்பெயர் பெற்றது.

சிறப்பு தொகு

ராமாயணத்தில் வலம் வரும் ராமர், சீதை, லட்சுமணன் ஆகிய மூவரும் வீற்றிருக்கும் கோயில் இது. இலங்கையில் இராவணனுடன் யுத்தம் புரிந்து, சீதையை மீட்டு வந்த ராமர். அயோத்திக்கு சென்று பட்டாபிஷேகம் செய்து கொண்டார். அப்போது ராமரின் வலது பக்கம் சீதையும், இடது பக்கம் லட்சுமணனும் இருந்தார்கள். அதே கோலத்தில் இங்கும் ராமருக்கு வலது பக்கத்தில் சீதையும் இடது பக்கத்தில் லட்சுமணனும் அமர்ந்த நிலையில் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருகிறார்கள்.

மற்ற தெய்வங்கள் தொகு

இந்த ஊரில் பட்டாபிஷேக ராமர், விநாயகர், காசி விஸ்வநாதர் - விசாலாட்சி, மாமுண்டி அய்யன், கருப்புசாமி, அழகு நாச்சியார், தட்சிணாமூர்த்தி, பூரணை, புஷ்கலை, அய்யனார், ஆதிசிவன் ஆகிய தெய்வங்களுக்கு தனிக் கோயில்கள் அமைந்துள்ளன.

Return to the user page of "எஸ்.பி.செந்தில் குமார்/மணல்தொட்டி".