பயனர் பேச்சு:துஷ்யந்தன் கனகரெத்தினம்/மணல்தொட்டி

திருக்கோணேச்சரம் புனித பூமியாக பிரகடனப்படுத்த வேண்டும். தொகு

திருக்கோணேசர் ஆலயம் புனித பூமியாக பிரகடனப்படுத்துவதற்கான கோரிக்கை.

இராவண சேனையின் செயல் முன்னெடுப்புகள்.

தென்கயிலை எனும் பெருமை பெற்றதும், சிவ பூமி என சித்தர்களாலும் முனிவர்களாலும் வணங்கப்பட்டதும், இதிகாசகாலங்களுக்கு முனபிருந்தே சிறப்புற்றிருந்ததும், திருஞானசம்பந்தப் பெருமானால் போற்றிப் பாடப்பட்டதுமான எமது திருக்கோணச்சரம் உலகவாழ் இந்துக்களின் அடையாளம் இதன் வரலாறும் புனிதமும் என்றும் மங்காதவாறு பேணுதல் திருகோணமலை வாழ் மக்களின் தலையாய கடமை ஆகும்.

1624 ஆம் ஆண்டு போத்திக்கீசரால் கைப்பற்றப்பட்டு இடித்தழிக்கப்பட்ட பின்னர் 339 வருட காலம் கடந்து 1952 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டு 1963 இல் குடமுழுக்கு நிகழ்ந்து வழிபாட்டுக்குரியதாகியது.

1965 ஆம் ஆண்டு இலங்கையில் அமைக்கப்பட்டிருந்த தேசிய அரசாங்கத்தில் உள்ளூராட்சி அமைச்சராக இருந்த தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.திருச்செல்வம் அவர்கள் திருக்கோணேச்சரத்தை புனித பிரதேசமாக்க மூவர்கொண்ட குழுவை நியமித்து வர்தகமானி அறிவித்தலை விடுத்திருந்தார். அன்று அதை புத்தபிக்குகள் எதிர்த்ததால் இத்தீர்மானம் அமைச்சரை கலந்தாலோசிக்காமல் பிரதமர் டட்லி சேனனாயகவினால் ரத்துச் செய்யப்பட்டது. அதனால் அமைச்சர் பதவி விலகினார்.

பின் 1981 இல் நடைபெற்ற குடமுழுக்கைத் தொடர்ந்து புனித பூமிக் கோரிக்கை ஆலய பரிபாலனசபை மற்றும் மக்களால் முன்வைக்கப்பட்டது இதை ஏற்காத அரசு அதற்கு மாறாக 1983 கோணேச்சர பகுதியை தொல்லியல் பிரதேசமாக பிரகடனப்படுத்தி இந்து மக்களின் நம்பிக்கையைத் தகர்த்தது.

தொடர் காலங்களில் பல்வேறு சிக்கல்களுக்கு உட்பட்ட இப்பிரதேசத்தில் பலவாறான ஆக்கிரமிப்புகளும் அத்துமீறல்களும் நிகழ்ந்த நிலையில் ஆலய பரிபாலனசபையின் கடும் முயற்சியில் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்த நடவடிக்கைகளின் பலனாக இந்துகலாச்சார அமைச்சர் கௌரவ டீ.சுவாமிநாதன் அவர்கள், திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இரா.சம்பந்தன் அவர்கள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் திருக்கோணேசர் ஆலய பரிபாலசபையினர் கலந்துகொண்ட 03.08.2016 ஆந்திகதி இந்துகலாச்சார அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தீர்மானமத்தின் பிரகாரம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க இந்து கலாச்சர அமைச்சர் 28.08.2016 திகதியில் தொல்லியல் திணைக்களத்திற்கு கடைகளை அகற்ற கடிதம் அனுப்பியிருந்தார்.

இதனை முன்னெடுக்க தொல்லியல் திணைக்களம் திருகோணமலை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுப்பிய 25.10.2016 திகதி கடிதத்தில் கடைகளை அமைக்க பொருத்தமான இடத்தை அடையாளம் கணுமாறு கேட்டிருந்தது.

இதற்குப் பதிலளித்த திருகோணமலை நகர அபிவிருத்தி அதிகாரசபை 01.11.2016 திகதியிட்ட கடிதத்தின் மூலம் இடமும் அதற்கான வரைபடத்தையும் தொல்பொருள் திணைக்களத்திற்கு அனுப்பியிருந்தது. ஆனால் எந்தவித பதிலும் வராத நிலையில் ஆலய பரிபாலன சபை 04.12.2016 திகதியிட்ட கடிதத்தின் மூலம் இந்து கலாச்சார அமைச்சருக்கு நினைவூட்டியதற்கு எந்த வித பதிலும் இல்லை.

திருக்கோணேச்சரத்தை பாதுகாக்க வேண்டும் மற்றும் அதை புனித பூமியாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என காலத்திற்குக் காலம் எமது முன்னோர் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர். அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவிக்கின்றோம்.

அந்த வழியில் காலம் எமக்கு இப்பணியை இன்று கையளித்துள்ளது.

இதனை எமது முதன்மைக்காரியமாகக் கருத்திற்கொண்டு இராவண சேனை திருக்கோணேசர் ஆலய நிர்வாக சபையின் ஒத்துழைப்புடன் திருக்கோணேசர் ஆலயத்தைப் புனித பூமியாக்கல், ஆலயத்தை தொல்பொருள் திணைக்களத்தின் பிடியில் இருந்து விடுவித்து சுதந்திரான செயல்பாடுகளுக்கு வகைசெய்தல் மற்றும் ஆலயத்தின் புனிதத்தையும் வரலாற்றையும் பேணுதல் போன்ற விடயம் தொடர்பாக முன்னெடுத்த பணிகளும் அடைவுகளும் வருமாறு.

1. திருக்கோணேச்சரம் புனித பூமியாக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை பேசு பொருளாக்கி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இதற்கான அழுத்தங்கள் வலுப்பெறவேண்டும் எனும் அடிப்படையில் மக்களிடம் கையெழுத்துப்பெறும் செயற்திட்டம் 03.08.2018 ஆரம்பிக்கப்பட்டது.

2. முதற்கட்டமாக திருகோணமலை ஆலயங்கள், சமய நிறுவனங்கள், சமூகசேவை அமைப்புகள் மற்றும் மக்களிடம் பெற்றுக்கொண்ட கையொப்பங்களுடன் ஜெனிவா கூட்டம் நடைபெற்ற போது 17 நாட்டுப் பிரதி நிதிகளிடம் இக்கோரிக்கை அகம் நிறுவனத்தின் பிரதி நிதிகள் மூலமாக 10.08.2019 இல் கையளிக்கப்பட்டது.

3. பத்தாயிரம் கையெழுத்தைத் திரட்டும் பணியுடன் புனித பூமியாக்கல் தொடர்பான செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் வெருகல் ஆலயத்திருவிழா(27.09.2018), வில்லூன்றி கந்தசுவாமி கோவில் திருவிழா, பத்திரகாளி கோவில் கௌரி விரத நாட்கள் (14, 15.09.2018) மற்றும் அலுவலகங்கள் என பலரிடம் தொடர் கையொப்பம் திரட்டப்பட்டது.

4. இராவண சேனை கேட்டுக்கொண்டதற்கிணங்க திருகோணமலை மாவட்ட ரொலோ உறுப்பினர் வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ அ.சிவாஜிலிங்கம் அவர்கள் மூலமாக வட மாகாணசபையில் பஞ்ச ஈச்சரங்கள் புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் எனும் தீர்மானத்தைக் கொண்டுவந்து அது சபையில் நிறைவேற்றப்பட்டது.

5. புனித பிரதேசமாக்கவேண்டும் எனும் கோரிக்கையும் மக்கள் கையொப்பமும் அடங்கிய ஆவணம் திருக்கோணேசர் ஆலயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ இரா.சம்பந்தன் அவர்களிடம் முதற்பிரதி 14.09.2018 அன்று கையளிக்கப்பட்டது.

6. குறித்த தினத்தில் புதிய இந்திய தூதுவராக பதவியேற்ற திரு.தரன்ஜித் சிங் அவர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ இரா.சம்பந்தன் அவர்களின் முன்னிலையில் திருக்கோணேசர் ஆலய பிரச்சனைகளும் புனித பூமியகப் பிரகடனப்படுத்த வேண்டியதன் தேவையினையும் கூறி கையெழுத்துப்பிரதி கையளிக்கப்பட்டது.

7. ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி அவர்கள் திருகோணமலை சிவில் அமைப்புகளைச் சந்திக்க திருமலைக்கு வருகைதந்திருந்தபோது எமது புனித பூமிக்கோரிக்கை மற்றும் மக்கள் கையெழுத்து கொண்ட ஆவணம் 05.10.2018 அன்று சமர்ப்பிக்கப்படது.

8. இராவண சேனையின் அறிவுறுத்தலுக்கு அமைய திருகோணமலை நகர சபை உறுப்பினர் திரு. க.ஜெயப்பிரகாஸ் திருகோணமலை நகர சபையில் திருக்கோணேசர் ஆலயம் புனித பூமியாகப் பிரகடனப்படுத்த வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைக்க நகரபிதா அதனை தீhமானமாக 7வது அமர்வில் 361 வது தீர்மானமாக இது 23..10.2018 அன்று நிறைவேற்றப்பட்டது.

9. இராவண சேனை கேட்டுக்கொண்டதற்கிணங்க மட்டக்களப்பு மாநகர சபையில் திருக்கோணேச்சரம் புனித பூமியாகப்பிரகடனப்படுத்த வேண்டும் எனச் சபையில் 01.11.2018 அன்று தீhமானம் நிறைவேற்றப்பட்டது.

10. திருக்கோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் திருககோணேச்சரம் மற்றும் கன்னியா புனித பூமியாக பிரகடனப்படுத்த வேண்டும் எனும் தீர்மானம் 16.10.2018 அன்று நிறைவேற்றப்பட்டது.

11. தேசிய ஒருமைப்பாடு, இனநல்லிணக்க மற்றும் அரசகரும மொழி அமைச்சர் கௌரவ மனோ கணேசன் அவர்களிடம் புனித பூமியாக்கல் கோரிக்கை மற்றும் மக்கள் கையெழுத்துத் தொகுதி 16.10.2018 அன்று அவரது செயலகத்தில் சென்று கலந்துரையாடி வழங்கி வைக்கப்பட்டது.

12. 2016 இற்கு முன்னர் கோணேசர் ஆலய பரிபால சபையின் பெரும் முயற்சியினால் அமைச்சு மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பிரதிகள் வழங்கப்பட்டதுடன் தற்போது அவை அவரது அமைச்சின் கீழ் இருப்பதும் நினைவூட்டப்படது.

13. அச்சந்திப்பில் கௌரவ மனோ கணேசன் அவர்களால் இது தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திரந்தார். ( அண்மையில் திருக்கேதீச்சரத்திற்கு பயணம் செய்த அமைச்சர் அவர்கள் பஞ்ச ஈச்சரங்களை புனித பூமியாக பிரகடனப்படுத்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பதாக அறிவித்தது நினைவு கூரத்தக்கது)

14. இந்த காலகட்டத்தில் திருக்கோணேசர் ஆலய விடயம் தொடர்பாக அவசர கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சுசந்த புஞ்சி நிலமே அவர்களின் அழைப்பின் பேரில் திருகோணமலை மாவட்டச் செயலாளரால் கூட்டப்பட்டது இதில் கலந்துகொண்ட இராவண சேனை தலைவரான திரு.கு.செந்தூரன் ஏற்கனவே அரசு அறிவித்த தீர்மான்களை அமுல் படுத்துமாறு வலியுறுத்தினார்.

15. கௌரவ மனோ கணேசன் அவர்கள் இந்துகலாச்சார அமைச்சராக பொறுப்பேற்றதும் அவருக்கான வாழ்த்துச் செய்தியுடன் எமது கோரிக்கைகள் மீண்டும் வழங்கப்பட்டது.

16. அத்துடன் திருக்கோணேச்சரம் உட்பட திருகோணமலை ஆலயம் தொடர்பன பிரச்சனைகளை நேரடியாக அமைச்சருக்குத் தெரியப்படுத்த திருகோணமலைக்கு அழைத்திருந்தோம் சிவராத்திரி தினத்தன்று வருகை தருவாக இருந்த அமைச்சர் தவிர்க்கமுடியாக காரணத்தால் பிறிதொரு தினத்தல் வருவதாக உறுதியளித்துள்ளார்.

17. திருகோணமலைக்கு வருகை தந்த அமைச்சர் கௌரவ ம.விஜயகலா அவர்களை சந்தித்து எமது கோரிக்கைகள் 02.03.2019 அன்று அவரிடம் முன்வைக்கப்பட்டது. அதன் போது அவர் 2016 முதல் தான் இதில் கவனம் செலுத்தி வருவதாகவும் புனித பூமியாக்கல் தீர்மானத்திற்கு தனது ஆதரவை நல்குவதாகவும் உறுதியளித்தார்.

18. அடுத்த கட்டமாக நாம் திருகோணமலை எழுத்தாளர்களைக் கொண்டு தொடர்ச்சியாக திருக்கோணேச்சரம் மற்றும் புனித பூமியாக்கல் தொடர்பாக எழுதக்கோரியுள்ளோம்.

19. திருகோணமலை புத்தஜீவிகள், பெரியவர்கள் மற்றும் முன்னைய காலங்களில் இந்த செயற்பாட்டை முன்னெடுத்தவர்களைச் சந்தித்து அவர்களது அனுபவங்களையும் ஆலோசனையும் பெற்று இச்செயற்பாட்டை முன்னெடுக்கும் செயற்பாட்டிலும் ஈடுபடுகின்றோம்.

20. பத்திரிகையாளர்களைக் கூட்டி ஓர் மாநாட்டினை நிகழ்த்தி திருக்கோணேசர் ஆலயத்தை புனித பூமியாக்கும் உன்னத செயற்பாட்டை மேலும் வலுவாக்கி இக்காரியத்தை வெற்றியடையச் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

21. மேற்படி செயற்பாடுகளில் எதிர் பார்த்த அடைவுகளை எட்டமுடியாத நிலை, கடைகளை அப்புறப்படுத்தல் ஆலயத்தின் சுயாதீன செயற்பாடுகளுக்கு இடையூறாக இருத்தல், ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வழக்குத் தாக்கல் செய்யவும் உத்தேசித்துள்ளோம்.

மேலும் இதுவரை காலமும் முன்னெடுத்த செயற்பாடுகள் அனைத்தும் திருக்கோணேசர் ஆலய பரிபாலன சபையின் சம்மதத்துடனும் தலைவர் மற்றும் செயலாளரின் பூரண ஒத்துழைப்புடனுமே ஆற்றுகின்றோம்.

எமக்கு பக்கபலமாக உள்ள நிர்வாக சபைக்கும் இப்பணிகளுக்காக எங்களுடன் பயணிக்கும் அனைவருக்கும் மேலான நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் அனைவரதும் ஒருமித்த பேராதரவையும் இந்த புனித பணிக்கு வேண்டி நிற்கின்றோம்.

இராவண சேனை.தடித்த எழுத்துக்கள்

Return to the user page of "துஷ்யந்தன் கனகரெத்தினம்/மணல்தொட்டி".