பயனர் பேச்சு:Kavitha Manalan/மணல்தொட்டி

மேற்கோள்கள் எனில் எவ்வாறு இருக்கவேண்டும்? உசாத்துணை எனில் எவ்வாறு இருக்கவேண்டும்? இணையத்தில் இதுவரை கவனிக்கப்படாத, ஆனால் தமிழுக்குத் தொண்டாற்றிவரும் இளந்தமிழறிஞர்கள், நூலாசிரியர்கள் பற்றி அவர்கள் அனுமதியுடன் விக்கிபீடியாவில் எழுத முனைகிறேன். இத்தகைய செய்திகள் கலைக்களஞ்சியத்திற்கு இடம்பெறும் தகுதியற்றன என ஏன் குறிப்பிடுகிறீர்கள்? நூலாசிரியர் பற்றிய குறிப்புகளுக்கு அவர்கள் எழுதிய நூல்களின் அட்டைகள் போதுமான சான்றாகக் கொள்ளப்படுமா? நூலாசிரியர் பற்றி செய்தித்தாள்களில் எழுதப்பெற்ற பத்திகள் (செய்தித் துணுக்குகள் அல்ல - பத்திகள்) சான்றாக ஏற்றுக்கொள்ளப்படுமா?

நான் ஒரு அரசுக்கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர். பொய்யான தகவல்கள் எதையும் நான் கொடுப்பதில்லை. என் பதிவுகளை நீக்குவதை நான் விரும்பவில்லை. அதற்கு எத்தகைய சான்று வேண்டும் எனக்கூறுங்கள். அதனை இணைக்க முனைகிறேன்.

விளக்கவேண்டும்.

Return to the user page of "Kavitha Manalan/மணல்தொட்டி".