பயனர் பேச்சு:Kirubai/மணல்தொட்டி

      ஒரு சாதனையாளரை உருவாக்கிய பயிற்சியாளர்களின் மீது பெரும்பாலும் புகழ் வெளிச்சம் விழுவதில்லை. ஒவ்வொரு  பயிற்சியாளரின் தியாகங்கள் மேல்தான் சாதனையாளரின் வெற்றிக்கோப்பைகள் அடுக்கப்படுகின்றன். இந்த உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் பணியை சாதனையாளர்களின் வரலாற்று நூல்கள் செய்து வருகின்றன. அந்நூலின் அடிப்படையில் உருவாகும் திரைப்படங்கள் அப்பணியை மேலும் சிறப்பாக செய்கின்றன.
     பியானோ என்ற இளம் சதுரங்கப்பபுலியை பயிற்சியளித்து உருவாக்கியது ‘ராபர்ட் கட்டாண்டே’ என்ற தியாகசெம்மல்தான். பல அவமானங்களை சகித்துக்கொண்டுதான் அவர் பியானோவை ஆளாக்குகிறார். உச்சகட்டமாக தனது துறையில் அவருக்கு பிடித்த வேலையை, எதிர்பார்த்ததைவிட அதிகமான சம்பளத்தோடு தேடி வரும்போது உதறித்தள்ளுகிறார்.

ராபர்ட் கட்டாண்டே இல்லையேல் பியானோ இலை. இந்த உணமையை உரக்கச் சொல்லிம் திரைப்படம் ‘குயின் ஆப் காத்வே’

குயின் ஆப் காத்வே

தொகு

ப்ளிக்கா

தொகு

2006-ல் வெளிவந்த ‘ப்ளிக்கா’ எனும் ஆங்கில திரைப்படத்தை இயக்கியவர் ‘மைக்கேல் மேயர்’. ‘கேட்டி’ ஒரு பதின்வயதுப் பெண்.அவளுக்கு படிப்பில் நாட்டமில்லை. தனது தகப்பனாரின் குதிரைப்பண்ணையை நிர்வகிக்க வேண்டும் என்பதே அவள் கனவு. அவள் விருப்பத்திற்கு மாறாக அவளது தந்தை ராப்,கேட்டியை ‘உண்டு உறைவிடப்பள்ளியில்’ சேர்க்கிறார். பள்ளித் தேர்வில் ஒன்றும் எழுதாமல் வெற்று தாளை கொடுத்து விட்டு கோடை விடுமுறைக்கு வீட்டுக்கு வருகிறாள். பெற்றோரும், சகோதரன் ஹாவர்டும் கேட்டியை வரவேற்று கொண்டாடுகிறார்கள்.

கேட்டி தந்தைக்கு தெரியாமல் பண்ணையில் இருக்கும் குதிரைகளுடன் நேரத்தை செலவிடுகிறாள். பண்ணைக்கு புதிதாக வந்த ஒரு முரட்டுக்குதிரையை யாராலும் அடக்க முடியவில்லை. அந்த முரட்டுக்குதிரையை இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் அடக்கி பழக்கி தன்வயப்படுத்துகிறாள். அதற்கு ‘ப்ளிக்கா’ என பெயரிட்டு பாசத்துடன் பழகுகிறாள்.. ஆரம்பத்தில் முரட்டுதனமாக எதிர்த்தாலும், கேட்டியின் அன்பை புரிந்துக்கொண்டு “ப்ளிக்கா’ நெருக்கமாகிறது.

கேட்டி தேர்வில் ஒன்றும் எழுதாமல் வெளியேறியதை பள்ளி நிர்வாகம் ராப்பிற்கு தெரிவிக்கிறது. ராப் ‘கேட்டியை’ கண்டிக்கிறார். கேட்டியின் தாயாரும் சகோதரனும் கேட்டிக்கு ஆதரவு அளிக்கிறார்கள். ஹாவர்ட் கேட்டியிடம் தான் கல்வி கற்க ஆசைப்படுவதாக தெரிவிக்கிறான்.

அச்சமயத்தில் ப்ளிக்காவை விற்க திட்டமிடுகிறார் ராப். கேட்டியும், ஹாவர்டும் ப்ளிக்காவை விற்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.ஆனால் ராப் பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றினாரா?

பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்தும் தனது ஆணாதிக்க போக்கினால் தந்தை ராப் எடுக்கும் நடவடிக்கைகளின் பின் விளைவுகளை விரிவாக பேசுகிறது. ‘ப்ளிக்கா’ திரைப்படம்.

Return to the user page of "Kirubai/மணல்தொட்டி".