பயனர் பேச்சு:Nsakthisubramanian/மணல்தொட்டி

மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி, திருநெல்வேலி.

தொகு

திருநெல்வேலி என்ற உடன் நமக்கு நினைவுக்கு வருபவற்றுள் முதன்மையானது தாமிரபரணி ஆறு ஆகும்.அத்தாமிரபரணி ஆற்றின் கரையினிலே அனைவரையும் கரையேற்றிய,கரையேற்றுகிற, கரையேற்றும் ஒரு சிறந்த கல்வி நிறுவனம்தான் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி. இதனை அனைவரும் ம.தி.தா.இந்துக் கல்லூரி என்பர். இக்கல்லூரியின் பெயரே மதியை தா என்ற பொருள் கொண்டது ஆகும். இக்கல்லூரியின் வாயிலை அலங்கரித்து நம்மை வரவேற்பவர், வினைகளைக் களையும் விநாயகர். இவ்விநாயகர் ஞானவிநாயகர் என்ற பெயரினைக் கொண்டு விளங்குகிறார்.

கல்லூரியின் வரலாறு

தொகு

இக்கல்லூரி முதலில் தமிழையும், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மொழியான ஆங்கிலத்தையும் ஒருங்கிணைந்து கற்றுக் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளி (Anglo Vernacular School). இது 1854ல் சிறு பள்ளியாக துவங்கியது.

முத்தமிழ் வளர்த்த கல்லூரி

தொகு

இயல், இசை மற்றும் நாடகம் என்ற முத்தமிழையும் போற்றி வளர்த்தது இக்கல்லூரியாகும். தமிழ் சிறுகதைச் சிற்பி புதுமைப்பித்தன், புதினங்களின் முன்னோடியான அ.மாதவையா, அறிவியலைத் தமிழில் அறிமுகம் செய்த பெ.நா.அப்புசாமி, தமிழ்ப்பண்ணை அமைத்த இரசிகமணி டி.கே.சிதம்பரம், ஆராய்ச்சிமணி வையாபுரிப்பிள்ளை ஆகியோரால் இக்கல்லூரி ஏற்றம் பெற்றது.தமிழில் அமைந்த கவிதை நாடகம் என்ற பெருமையுடைய “மனோன்மணியம்” படைத்து அளித்த பெருமையும், இந்து உயர்நிலைப் பள்ளியினை இந்துக் கல்லூரியாக மாற்றி பின்னாளில் அதன் முதல்வராகவும் பணியாற்றிய பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களைச்சாரும். தமிழ்த்தாய்க்கு வாழ்த்துப் பாடி தமிழை மனோன்மணியம் சுந்தரனார் போற்றி வளர்த்தார்.

கல்லூரியின் குறிக்கோள் (Motto)

தொகு

இக்கல்லூரியின் குறிக்கோள் “ஏஜ் கோடு அஜிஸ் (Age quod agis)" என்பதாகும். இது ஓர் இலத்தின் வாக்கியம். இதன் பொருள் “செய்வன திருந்தச் செய்” ஆகும். (whatever you do, do it perfectly).


கல்லூரியின் கடவுள் வாழ்த்து

தொகு

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

சிறிது தள்ளிவைக்கப்பட்ட வரி உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்

சிறிது தள்ளிவைக்கப்பட்ட வரி

உறவு கலவாமை வேண்டும் பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்

சிறிது தள்ளிவைக்கப்பட்ட வரி

பொய்மை பேசாதிருக்க வேண்டும்

சிறிது தள்ளிவைக்கப்பட்ட வரி

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்

சிறிது தள்ளிவைக்கப்பட்ட வரி

பிடியாதிருக்க வேண்டும்

சிறிது தள்ளிவைக்கப்பட்ட வரி

மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்

சிறிது தள்ளிவைக்கப்பட்ட வரி
சிறிது தள்ளிவைக்கப்பட்ட வரி

நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்

சிறிது தள்ளிவைக்கப்பட்ட வரி

சண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சிறிது தள்ளிவைக்கப்பட்ட வரி

சண்முகத் தெய்வமணியே. இப்பாடல் திருவருட்பா எழுதிய இராமலிங்கஅடிகளார் அவர்களால் எழுதப்பட்டது. இப்பாடல் ஒருவன் எவ்வாறு வாழ வேண்டும் என்றும் எப்பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அழகாகக் கூறுகிறது.

Return to the user page of "Nsakthisubramanian/மணல்தொட்டி".