பயனர் பேச்சு:Poongundran madhavan/மணல்தொட்டி

'உண்மை' மற்றும் 'நிசம்' என்ற சொற்களுக்கிடையேயான வேறுபாடுகளை கூறல்.

தொகு

உண்மை மற்றும் நிசம் (நிஜம்) என்ற இரண்டு சொற்களும் கிட்டத்தட்ட ஒரே பொருளைத் தந்தாலும். அந்த இரண்டு சொற்களும் பயன்படும் விதத்தில் வேறுபாடுகள் உள்ளன. அதற்கான விளக்கத்தை இங்கே தர விழைகிறேன். 'உண்மை' என்பது சாத்தியமான ஒரு தமிழ் சொல். 'நிசம்' என்பதும் அதே போல ஒரு சொல். இரண்டும் எப்படி வேறுபடுகின்றன என்பதை இங்கு விளக்குகிறேன்.

தந்தையிடம் ஒரு மகன் பள்ளிக்கட்டணம் கட்ட வேண்டும் என்று சொல்கிறார். தந்தை இரண்டொரு நாளில் கட்டிவிடலாம் என்கிறார். அவர் சொல்வது கட்டிவிடலாம் என்ற 'உண்மை' வார்த்தை. ஆனாலும் இரண்டொரு நாட்களில் கட்டணம் செலுத்த முடியவில்லை. ஒருவாரம் கழித்து மகனிடம் தந்தை கட்டணத்துக்கான தொகையை கொடுக்கிறார்.

ஒரு வாரம் கழிந்த பின்னர் அவர் சொன்ன உண்மை வார்த்தை நிசமாகியது. ஆகவே, 'உண்மை' என்பது சாத்தியமான ஒரு வார்த்தை. அது என்று நிகழ்ந்ததோ அது நிசம். ஆக, நிகழ்வது நிசம்.

Return to the user page of "Poongundran madhavan/மணல்தொட்டி".