பயனர் பேச்சு:Sancheevis/தமிழ் விக்கிச் சமூகம்

விரிவாகப் பதில் தர வேண்டும் என்று எண்ணியதால் சற்றுத் தாமதாமி விட்டது.

தமிழ் விக்கிச் சமூகம் என்றால் என்ன, அது ஏன் முக்கியம், அது எவ்வகைப் பட்டது/பண்புகள் என்ன, அது எதிர்நோக்கும் சிக்கல்கள் என்ன போன்ற கேள்விகளுக்கு இக் கட்டுரை பதில் தரலாம்.

  • விக்கியூடகங்களில் நுட்பம் ஒரு கண் என்றால் மறு கண் விக்கிச் சமூகமே. விக்கியில் எவ்வாறு நுட்பக் கட்டமைப்பு முக்கியமோ, அது போலவே சமூகப் பேணலும் வளர்ச்சியும் முக்கியம். விக்கிச் சமூகம் பரந்து பட்டவர்களிடம் சிறிய சிறிய பங்களிப்புக்களை வாங்கி ஒரு பெரும் திட்டத்தை முன்னெடுப்பதற்கான கட்டமைப்பைக் கொண்டது. பார்க்க: https://docs.google.com/presentation/d/1oa32y4NYhES494-f5qXiw5VWEsHT3gwnTQKeHZmg5LU/edit#slide=id.p (தமிழ் விக்கியூடகங்கள்:

கூட்டு மதிநுட்ப மாதிரி) collaboration, collective intelligence, distributed community, free culture, open content போன்ற கருத்துக்களைத் தொட்டுச் செல்லாம். சம்மளம் இல்லாமல் தன்னார்வத்தால் இனைந்த கூட்டம்.

  • ஒரு விக்கியில் தரத்தில் அதன் சமூக வளர்ச்சியே முதன்மை அளவீடு. எ.கா கட்டுரை எண்ணிக்கையில் இந்தி முன்னிநிலை நிக்கலாம். ஆனால் சமூகத்தை அல்லது குமுகத்தைக் பேணுவதில் வளர்ப்பதில் மலையால விக்கி முதலாவதாக நிற்கிறது. இதைப் பற்றிய குறிப்புகள் முக்கியம். Community development, building மிக முக்கியமான ஒரு விக்கிச் செயற்பாடு என்பதை விளக்க வேண்டும்.
  • பன்மைத்துவத்தில், சாதி சமயம் கடந்த ஒரு களம் என்பதைக் குறிப்பிடுதல் நன்று. முதன் முதலாக இத்தகைய வகையில் ஒரு கருத்துப் பரிமாற்றத்தை செய்ய உதவும் ஒரு களம். எ.கா கலைச்சொற்கள், மொழிநடை.
  • நிறுவனமயமாதலை நாம் தெரிந்து தவிர்த்துள்ளோம் (ஆற்றல் விரயம், படிநிலைச் சிக்கல் போன்ற காரணங்களால்) என்று குறிப்பிடலாம்.
  • சந்தித்த சில சவால்களைக் குறிப்பிடலாம். எ.கா கிரந்தம். எவ்வாறு இணக்க முடிவு, கலந்துரையாடல்கள், திறந்த செயற்பாடுகள் சிக்கல்களைத் தீர்க்க உதவுகின்றன என்பதைக் குறிப்பிடலாம்.
  • இந்தியாவிலும், இணையத்திலும் இன்னும் பெரும்பான்மையினருக்கு இணையம் கிட்டவில்லை. எனவே தமிழ் விக்கிச் சமூகம் இன்னும் தொடக்க நிலையிலேயே இருக்கின்றது. அதன் வளர்ச்சி வாய்ப்புக்கள் உச்சம்.

--Natkeeran (பேச்சு) 13:25, 11 செப்டம்பர் 2013 (UTC)

கருத்துக்களுக்கு நன்றி நற்கீரன். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 17:37, 11 செப்டம்பர் 2013 (UTC)
மேலும் ஏதும் கருத்தக்கள் இருப்பின் பயனர்கள் தெரிவிக்கலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:25, 13 செப்டம்பர் 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தை வளர்ப்பதற்கும் தக்க வைப்பதற்கும் நாம் மேற்கொள்ளும் அணுகுமுறைகள் குறித்தும் குறிப்பிட வேண்டும்.

  • தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்க காலத்தில் வலைப்பதிவுகளில் விக்கிப்பீடியாவுக்கான இலச்சினையைக் காட்டி வாசகர்களையும் பங்களிப்பாளர்களையும் ஈர்த்தோம்.
  • ஊடகப் போட்டிக்கு சமூக வலைத்தளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தினோம்.
  • நேரடி பயிற்சிப் பட்டறைகள் மூலம் வந்த பங்களிப்பாளர்கள் குறைவு. ஆனால், இது ஏற்கனவே உள்ள பங்களிப்பாளர்களிடையே முகம் பார்த்து அறிமுகம் செய்து கொள்வதற்கான வாய்ப்பைத் தந்தது. இந்த நட்பும் புரிதலும் விக்கிப்பீடியர் சமூகத்தின் ஒற்றுமையைக் காக்கவும் உதவியது.
  • முதற்பக்கத்தில் பங்களிப்பாளர் அறிமுகம் போன்றவை பங்களிப்பாளர்களுக்கான ஊக்குவிப்பாக இருந்தது. உலகளவில் இது போல் செய்யும் விக்கித்திட்டங்கள் குறைவே.
  • தள அறிவிப்பில் பங்களிப்பாளர் படங்களை இட்டதன் மூலம் புதிய பங்களிப்பாளர்களைப் பெற்றுக் கொண்டதோடு மட்டும் அல்லாமல், இது தங்கள் விக்கி என்று அனைவரையும் உணர வைத்தது.
  • நிறைய பங்களிப்பாளர்களுக்கு நிருவாக அணுக்கம் அளித்தது அவர்களுக்கு ஒரு பொறுப்பையும், தமிழ் விக்கிப்பீடியாவின் மீதான ஒரு பிணைப்பையும் அளித்துள்ளது. மற்ற பல விக்கிகளை ஒப்பிடுகையில் நாம் மிக அதிக அளவில் பங்களிப்பாளர்களை நிருவாகிகளாக ஆக்கியுள்ளோம். இது ஒரு வகையில் நிருவாகப் பராமரிப்பும் அதிகாரமும் ஒரு சில பயனர்களிடையே குவிக்காமல் பரவலாகச் செய்தது. அவ்வாறு பரவலாக்காத சில விக்கிகளில் அதுவே பிரச்சினையானது. நாளடைவில் பங்களிப்பாளர்கள் ஊக்கம் குன்றி விலகவும் செய்தது.
  • பங்களிப்பாளர்களிடையே மின்மடல் உரையாடல்கள் இருந்தாலும், திட்டம் குறித்த அனைத்து முடிவுகளும் விக்கியிலேயே வெளிப்படையாகவும் கூடிப் பேசியுமே எடுக்கப்படுகிறது.
  • கட்டுரைப் போட்டியும் ஊடகப் போட்டியும் சோடாபாட்டில், பவுல், அன்டன் போன்ற சிறந்த பங்களிப்பாளர்களைப் பெற்றுத் தந்தது.
  • தமிழ் விக்கிப்பீடியாவின் ஒவ்வொரு கட்டத்திலும் யாராவது ஒரு பங்களிப்பாளர் மிக முனைப்பாக ஈடுபட்டுப் புதிய பங்களிப்பாளருக்கு பெரும் வழிகாட்டிகளாகத் திகழ்வதுண்டு. எடுத்துக்காட்டுக்கு, சண்முகம், சோடா பாட்டில் ஆகியோர். இது அதிகம் கவனிக்கப்படாத விசயம் ஆனால் சமூகத்தைக் காட்டிக் காப்பதில் இத்தகையோரின் பங்கு மிக முக்கியமானது.
  • தமிழ் விக்கிப்பீடியாவில் நேரடியாகப் பங்களிப்போர் போக தமிழ் விக்கிப்பீடியாவின் நலம் விரும்பும் ஏராளமானோர் பிற தமிழிணையத் திட்டங்கள், திறமூல இயக்கங்கள், ஊடகங்களில் இருக்கிறார்கள். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி, பரப்புரைக்கு அவ்வப்போது மறைமுகப் பங்களிப்பைச் செய்து வருகிறார்கள்.

அப்புறம், இதற்கு முன்பு நடந்த இரு போட்டிகளில் ஒரு போட்டி மட்டுமே விக்கிமீடியா நல்கையுடன் நடந்தது. முதலில் நடந்த கட்டுரைப் போட்டி தமிழ்நாடு அரசு ஆதரவுடன் நடந்தது. இப்போது நடக்கும் தொடர் கட்டுரைப் போட்டியை விக்கிமீடியா நல்கை பெறும் இரண்டாவது போட்டியாகக் கருதலாம்.--இரவி (பேச்சு) 09:55, 13 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி இரவி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:21, 13 செப்டம்பர் 2013 (UTC)

மேலும் சில கருத்துக்கள்

தொகு

கட்டுரைக்கு நன்றி சஞ்சீவி. இக் கட்டுரையையில் விக்கிப் பயனர்கள் பெறும் பயன்கள் தொடர்பாக ஒரு பத்தி சேர்த்தால் சிறப்பாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 15:53, 14 அக்டோபர் 2013 (UTC)Reply

Return to the user page of "Sancheevis/தமிழ் விக்கிச் சமூகம்".