பயனர் பேச்சு:TNSEDEVABITEPLR/மணல்தொட்டி

மீன்கள் வலசை போதல்

ஒரு விலங்கு தனக்கு வேண்டிய உணவிற்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் தன் இருப்பிடத்திலிருந்து மற்றொரு இருப்பிடத்திற்கு சென்று வருவதை வலசை போதல் என்கிறோம். மீன்களும் பறவைகள் போன்று வெவ்வேறு காலங்களில் வலசை போகின்றன.

மீன்கள் வலசை போதலுக்கான காரணங்கள்:

  1. உணவு பெறுவதற்காக
  2. முட்டையிடுவதற்காக
  3. சாதகமான வெப்பம், ஒளி போன்றனவற்றை அடைவதற்காக
  4. . இரத்த அழுத்தம் சீராக வைப்பதற்காக
  5. சாதகமான நன்னீா் அல்லது உவா்நீா் பகுதி அடைதலுக்காக.

வலசை போதலின் வகைகள்

தொகு
  • சில மீன்கள் வசந்த காலத்தில் வடக்கேயும், இலையுதிா் காலத்தில் தெற்கேயும் கிடைமட்டத்தில் வலசை போகின்றன. (எ. கா)கத்திமீன்.
  • ஆழ்மட்டத்தில் வாழும் சில மீன்கள் நாள்தோறும் மேலும் கீழுமாக வலசை போகின்றன.
  • சில மீன்கள் நன்னீாிலிருந்து கடல்நீா் நோக்கி வலசை போகன்றன. இதற்கு கடல்நோக்கு மீன்கள் எனப்படும். (எ. கா.) விலாங்கு மீன்கள்
  • சில மீன்கள் இதற்கு நோ்மாறாக கடல்நீாிலிருந்து நன்னீா் நோக்கி இடம்பெயா்கின்றன. இதற்கு ஆற்றுநோக்கு மீன்கள் எனப்படும். (எ. கா) ஆங்குல்லா, சால்மன்

வழிசெலுத்தல் பட்டி

Return to the user page of "TNSEDEVABITEPLR/மணல்தொட்டி".