பயனர் பேச்சு:TNSE VISU CBE/மணல்தொட்டி
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by TNSE VISU CBE
--TNSE VISU CBE (பேச்சு) 06:29, 5 சூலை 2017 (UTC)=== நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள் ===
நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள் என்பது ந. கோபி என்பவரால் எழுதப்பட்ட புதினம் ஆகும். இதை தடாகம் பதிப்பகம் 2016 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறது. 2016 ஆம் ஆண்டின் கவனிக்கப்படத்தக்க 15 புத்தகங்களுள் ஒன்றான மிக முகாமையான புத்தகமாக விகடன் இந்நூலைக் குறிப்பிட்டுள்ளது. ஊடகவியலாளர் குணசேகரன், முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய வட தமிழகத்தில் என்ன மாதிரியான சமூக மாற்றங்கள் நிகழ்ந்தன மற்றும் அங்கிருந்த விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் போராட்டங்கள் குறித்தான பதிவுகளை சொல்கிறது என இந்த புத்தகத்தைப் பற்றி குறிப்பிடுகிறார்.
நாவலின் கதை
சென்னையின் ஒரு பள்ளியில் சிறுமிக்கு நத்தையை வரைந்து வருதல் வீட்டுப்பாடமாகக் கொடுக்கப்படுகிறது. நத்தையை நேரில் கண்டறியாத குழந்தை தன் அம்மாவிடம் நத்தையை வரைந்து தருமாறு சொல்கிறது. அவளின் அம்மாவும் நத்தையை நேரில் கண்டறியாதவள் ஆகையால் தனமனதில் உள்ளவாறு வரைகிறாள். அதைப்பார்த்த சிறுமியின் தந்தை வரையப்பட்ட நத்தை நத்தை போலல்லாமல் சங்குசக்கரம் போல் உள்ளதெனக் கூற சிறுமியின் அம்மா தான் நத்தையை நேரில் பார்த்தறியாததைக் கூற சிறுமி நத்தையை நேரில் பாரக்க ஆசைப்படுகிறார். தன் சிறுவயதில் தன் கிராமத்தில் நத்தைகளை மிகுதியாக இருந்ததையும் நத்தைகளை சமைத்து உண்பது தங்கள் உணவுப்பழக்கமாக இருந்துள்ளதையும் நினைவுகூர்ந்து முப்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட தன் கிராமத்து விளிம்புநிலை மக்களுடனான வாழ்வை மிக யதார்த்தமாக இருந்தது இருந்தபடி அவர்களின் வாழ்வியற்கூறுகளை மிக அழகாக மக்களின் வட்டார மொழியில் விவரித்து நாவலுக்குள் நம்மை கட்டிக்கூட்டிச் செல்கிறார்.