பயனர் (கணினியல்)

பயனர் (user) எனும் சொல்லானது கணனியில் துறையில் பயன்படுத்துவோர் மற்றும் பயன்பெறுவோர் எனும் இரண்டு பொருற்களை முதன்மையாகக் கொண்டது. கணினித் துறையில் "பயனர்" எனும் சொல் மனிதர்களையும் மனிதரல்லாத அதேவேளை மனிதரால் இயக்கும் தானியங்கிகளையும் சிலநேரம் குறிக்கும்.

கணினியில் பயனர் தொகு

கணினியில் பயனர் எனும் சொல்லானது, கணினியைப் பயன்படுத்தும் ஒருவரைக் குறிக்கும். எல்லா கணினிகளிலும் பயனர் (User) எனும் பதிவு பக்கம் கட்டாயம் இருக்கும். அங்கே இந்த "பயனர்" எனும் பதிவு பக்கத்தை அல்லது பெயரை அநேகமாக கணினியை வாங்கியப்பின் பயன்படுத்துபவர் தனது பெயரை அல்லது தான் விரும்பு பெயரை இட்டு மாற்றம் செய்துக்கொள்வார். இங்கே "பயனர்" எனும் சொல்லானது அக்கணினியை பயன்படுத்துபவரும் பயன்பெறுபவரும் ஆகிய இரண்டு பொருற்களை உணர்த்துகிறது.

இணையத்தில் பயனர் தொகு

இணையத்தில் பயனர் எனும் சொல்லானதும் இணையத்தைப் பயன்படுத்துவோர் மற்றும் பயன்பெறுவோர் எனும் இருபொருள் கொண்டதே ஆகும். அதனடிப்படையில் இணையத்தை பயன்படுத்தும் அனைவரும் பயனர்களே ஆவர். சில இணையத்தளங்களில் பயனர் பக்கங்கள் உள்ளன. அந்த பயனர் பக்கங்களை பார்வையிட பொதுவாக எல்லாப் பயனர்களுக்கும் முடியுமாயினும், அவற்றின் உள்நுழைந்து மேலதிகமான பயன்களைப் பெறுவதற்கு பயனராக பதிவு செய்தல் அவசியமாகும்; இதனை பயனராக கணக்கு திறத்தல் என்றும் கூறப்படுக்கின்றது. பயனராக பதிவு செய்வதற்கு அல்லது ஒரு பயனர் கணக்கு திறப்பதற்கு ஒரு பயனர் பெயரும் அவசியமாகும். பயனர் பெயர் என்பது தாம் விரும்பு வகையில் ஒருவர் இட்டுக்கொள்ளும் பெயராகும்.

பயனர் கணக்கு தொகு

விக்கிப்பீடியா பயனர் தொகு

மாற்றுக்கருத்து தொகு

இந்த "பயனர்" எனும் சொல் தொடர்பில் பல திறனாய்வாளர்களிடம் மாற்றுக்கருத்துக்களும் உள்ளன. [1] சில கணினியல் தொழில்சார் திறானாய்வாளர்கள் இந்த "பயனர்" எனும் சொல் ஏற்புடையதல்ல என்றும் அச்சொல் தொடர்பில் தமது விருப்பமின்மையையும் தெரிவித்துள்ளனர்; அத்துடன் இந்த "பயனர்" எனும் சொற்பதம் மாற்றம் பெறவேண்டும் என்பதனையும் வலியுருத்துகின்றனர்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2007-08-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-01-25 அன்று பார்க்கப்பட்டது.
  2. Don Norman. "Words Matter. Talk About People: Not Customers, Not Consumers, Not Users". 2007-08-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-01-25 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_(கணினியல்)&oldid=3700511" இருந்து மீள்விக்கப்பட்டது