பயாஸ்கோப்வாலா
பயாஸ்கோப்வாலா (Bioscopewala (ஆங்கில மொழி: Man with a Bioscope) என்பது இந்திய இந்தி நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை தேப் மேத்தெகர் இயக்க, சுனில் தோசி தயாரித்துள்ளார். இப்படத்தில் டேனி டென்சொங்பா மற்றும் கீதாஞ்சலி தபா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில், 2017 அக்டோபர் 28 அன்று திரையிடப்பட்டது.[1] இது நோபல்பரிசு பெற்ற கவிஞரான ரவீந்திரநாத் தாகூரின் 1892 ஆண்டு சிறுகதையான ‘காபூலிவாலா’வின் தழுவல் ஆகும். இந்தியாவில் இப்படம் 2018 மே 25 மே அன்று வெளியிடப்பட்டது.[2] படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டமானது, 2018 மே 8, அன்று பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவால் யூடியூப்பில் வெளியிடப்பட்டது.[3]
பயாஸ்கோப்வாலா | |
---|---|
இயக்கம் | தேப் மேத்தெகர் |
தயாரிப்பு | சுனில் தோசி |
கதை | தேப் மேத்தெகர் சுனில் தோசி |
மூலக்கதை | இரவீந்திரநாத் தாகூரின் காபுல்வாலா (சிறுகதை) |
திரைக்கதை | இராதிகா ஆனந்த் சுனில் தோசி |
இசை | சந்தேஷ் சாண்டிலியா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ரபி முகமது |
படத்தொகுப்பு | திப்பா கல்ரா |
கலையகம் | ஹேண்ட்மேட் பிலிம்ஸ் ஸ்டார் இந்தியா |
விநியோகம் | பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் |
வெளியீடு | 28 அக்டோபர் 2017(டோக்கியோ சர்வதேச திரைப்பட விழா) 25 மே 2018 (India) |
ஓட்டம் | 91 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
கதை
தொகுபயாஸ்கோப்வாலா என்பது ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து தப்பி வந்து கல்கத்தா வீதிகளில் குழந்தைகளுக்கு பயாஸ்கோப் காண்பித்து வாழ்கின்ற ரெஹ்மத் கான் (டேனி டென்சொங்பா) என்பவரின் வாழ்கையைச் சொல்லுவதாக உள்ளது. அவரின் மகள் வயதையொத்த மின்னி என்னும் சிறுமியிடம் பழகி சிறிது காலத்துக்குப் பின் அவள் வாழ்க்கையிலிருந்து நகர்ந்து விடுகிறார். பல ஆண்டுகள் கழிய, மின்னி வளர்ந்து பிரான்சு நாட்டில் ஆவணப் பட இயக்குநராகிவிடுகிறார். அவரது தந்தை ஆப்கானிஸ்தான் செல்லும்போது வானூர்தி நேர்ச்சியில் இறந்துவிடுகிறார். அவரது தந்தை அந்த பயணத்தை மேற்கொண்ட காரணத்தை அறிய மின்னி (கீதாஞ்சலி தபா) முயற்சி செய்வதும், பயாஸ்கோப்காரரான ரெஹ்மத் கானின் பின்புலத்தையும் தேடிக் கண்ட்டைவதும்தான் கதை.[4]
நடிகர்கள்
தொகு- டேனி டென்சொங்பா - ரெஹ்மத் கானாக
- கீதாஞ்சலி தபா - மின்னி பாசு
- டிஸ்கா சோப்ரா - விகிதா
- அடில் ஹுசைன் - ரோபி பாசு
- பிரிஜேந்திரா காலா - போலா
- மீர் சர்வர் - ஸத்ரான்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Asian Feature - Bioscopewala - World Premiere". Tokyo International Film Festival.
- ↑ "Danny Denzongpa is today's version of Rabindranath Tagore's Kabuliwala in Bioscopewala trailer". ஹிந்துஸ்தான் டைம்ஸ்.
- ↑ "Bioscopewala Trailer - Danny Denzongpa - Geetanjali Thap". யூடியூப்.
- ↑ "At Tokyo Film Fest, Tagore's Kabuliwala Transforms into Bioscopewala". News18.