பயோனிச்சியூரசு தமிழென்சிசு

பயோனிச்சியூரசு தமிழென்சிசு
பயோனிச்சியூரசு தமிழென்சிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
எண்டோநாத்தா
வரிசை:
கொலெம்போலா
குடும்பம்:
ஒனிச்சியுரிடே
பேரினம்:
பயோனிச்சியூரசு
இனம்:
ப. தமிழென்சிசு
இருசொற் பெயரீடு
பயோனிச்சியூரசு தமிழென்சிசு
துனிசா, சுமித்ரா, நர்மதா, சோதி & சனில், 2021

பயோனிச்சியூரசு தமிழென்சிசு (Bionychiurus tamilensis) என்பது ஓனிச்சியூரிடே என்ற குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது ஸ்பிரிங் டெயில்களின் குழு.[1] ஒனிச்சியூரிடே குடும்பத்திலிருந்து 51 பேரினங்களில் 600 சிற்றினங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பயோனிச்சியூரசு பேரினம் பேரினம், 1996-ம் ஆண்டு போமாரோசுகியால் நிறுவப்பட்டது[2] ஒனைசியுரசு நார்மாலிசின் இளம் உயிரியின் முதல் தோலுரிப்பு இடைப்பருவ உருவியல் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டது. பின்னர், வெய்னர்[3] ஓ. நார்மலிசை அடிப்படையாகக் கொண்ட பாங்கலோபோரசு என்ற புதிய பேரினத்தை நிறுவினார். ஆனால் போமாரோசுகி 1998 இல் பாங்கலோபோரசு என்பது பயனோச்சியூரசு பேரினத்தினை ஒத்தது என அறிவித்தார்.[4]

பயோனிச்சியரசு தமிலென்சிசு என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் நீலமலையில் அண்மையில் கண்டறியப்பட்ட புதிய இனமாகும். இந்தியாவிலிருந்து முதன் முதலாக அறியப்படும் பயோனிச்சியரசு சிற்றினம் இதுவாகும். இந்த புதிய சிற்றினம் குறித்த தகவலை மூலக்கூறு ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Lubbock, John (1870). "XII. Notes on the Thysanura.-Part IV". Transactions of the Linnean Society of London 27 (2): 277–297. doi:10.1111/j.1096-3642.1870.tb00214.x. https://zenodo.org/record/2118830. 
  2. Pomorski RJ (1996) The first instar larvae of Onychiurinae-a systematic study (Collembola: Onychiuridae). Genus. 7(1): 1–102.
  3. Weiner WM (1996) Generic revision of Onychiurinae (Collembola: Onychiuridae) with a cladistic analysis. Annals of the Entomological Society of France (NS) 32: 163–200
  4. Pomorski RJ (1998) Onychiurinae of Poland (Collembola: Onychiuridae). Genus (Supplement) 1–201
  5. Thunnisa, Abu Muhsina; Sumithra, Nallathambi; Narmatha, Senthilkumar; Jyothi, Manikkiri; Sanil, Ravindranathanpillai (2021-02-02). First record of genus Bionychiurus Pomorski 1996 (Collembola: Onychiuridae) from India.. doi:10.21203/rs.3.rs-156881/v1. https://www.researchsquare.com/article/rs-156881/v1.