பரணர், பாட்டியல் புலவர்
சிறந்து விளங்கிய பெருமக்களின் பெயரைத் தனக்குப் புனைபெயராக வைத்துக்கொள்வதிலும், தன் மக்களுக்கு இட்டு வழங்குவதிலும் மக்கள் ஆர்வம் காட்டுவது இயல்பே.
இந்த வகையில் வைத்துக்கொண்ட பெயர்களில் ஒன்று பரணர்
சங்ககாலப் பரணருக்குப் பின்னர் ஒன்பதாம் நூற்றாண்டில் பரணர் என்னும் பெயருடன் விளங்கிய புலவர் ஒருவர் பாட்டியல் நூல் ஒன்றைச் செய்துள்ளார்.
இவரது நூலிலிருந்து எடுக்கப்பட்ட 34 நூற்பாக்கள் பன்னிருபாட்டியல் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
- எழுத்து 20,
- சொல் 1,
- இனம் 13.
- பிள்ளைத்தமிழ் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கும் இவர் முடி சூடிய அரசன் மீது பிள்ளைத்தமிழ் பாடக்கூடாது என்கிறார். பன்னிரு பாட்டியல் 178
இவரது நூலுக்கு வழங்கிய வேறு பெயர்கள் [1]
- பருணர் பாட்டியல்
- வாருணர் பாட்டியல்
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑ பேராசிரியர் தொல்காப்பிய உரை