பரப்பலாறு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி

பரப்பலாறு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் பரப்பலாறு மலைப்பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஆகும். இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிாியர், ஒரு உதவி ஆசிாியரும் மற்றும் சுமார் 25 மாணவர்கள் பயிலுகின்றனர். ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலும் எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழி கற்றல் மூலமாகவும், ஐந்தாம் வகுப்பிற்கு செயல் வழி கற்றல் மூலமாகவும் கற்பிக்கப்படுகிறது. மாணவர்கள் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளில் அதிகமான ஈடுபாடுடன் கற்கின்றனர். நான்கு பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்டு நடுப்பகுதியில் பரப்பலாறு அணையும் பள்ளிக்கு மிகவும் இயற்கையான சூழலில் பள்ளியானது அமைந்துள்ளது.

இருப்பிடம்

தொகு

ஒட்டன்சத்திரம் நகாிலிருந்து பாச்சலுார் செல்லும் வழியில் சுமார் 13 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இதன் வழியாக மலைகளின் இளவரசி கொடைக்கானல், இவ்வழியில் சுமார் 90 கி.மீ. தூரத்தில் உள்ளது.

சிறு ஊர்கள்

தொகு

நெல்லுக்குழிபள்ளம், பால்கடை, மாஞ்சோலை ஆகிய பகுதிகளை கொண்டுள்ளது.

மக்கள் தொகை

தொகு

இப்பகுதியில் ஆண்கள் 478 பேர்களும், 372 பேர்களும் வசிக்கின்றனர். இதில் பள்ளி வயது குழந்தைகள் சுமார் 28 பேர் உள்ளனர். இதில் பரப்பலாறு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 25 பேர் பயிலுகின்றனர். இப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளியும் செயல்படுகின்றது. இதில் 145 மாணவ, மாணவியரும் பயிலுகின்றனர்.

தொழில்

தொகு

இப்பகுதியில் வசிக்கும் மக்கள் முக்கியத்தொழில் விவசாயம் ஆகும். மேலும் தேன் எடுத்தல், மீன் பிடித்தல், ஆடு வளர்த்தல் ஆகிய தொழில்களை செய்கின்றனர்.

கலாச்சாரம்

தொகு

இப்பகுதியில் இந்துக்கள், கிருத்துவர்கள் வசிக்கின்றனர். வருடந்தோரும் இந்துக்கள் தங்கள் குலதெய்வ வழிபாடாக விழாக்கள் நடத்தி அன்னதானம் செய்கின்றனர்.