பரமபதம் (விளையாட்டு)
பரமபதம் (ஏணியும் பாம்பும்) ஒரு பாரம்பரிய பலகை விளையாட்டு. இரண்டுக்கு மேற்பட்டோர் விளையாடும் இவ்விளையாட்டில் பலகை சதுரக் கட்டங்களைக் கொண்டதாக இருக்கும். பொதுவாக 8*8, 10*10, 12*12 எண்ணிக்கையில் சதுரக் கட்டங்கள் இருக்கும். சில கட்டங்களை ஏணிகளும், பாம்புகளும் இணைக்கும். ஏணிகள், பாம்புகளின் எண்ணிக்கை, அமைப்பு போன்றவையும் பலகைக்குப் பலகை வேறுபடலாம்.[1]
வரலாறு
தொகுஇவ் விளையாட்டு பண்டைய இந்தியாவில் கி.மு இரண்டாம் நூற்றாண்டளவில் விளையாடப்பட்டது. 1892 அளவில் இங்கிலாந்தில் அறிமுகமானது. இவ்விளையாட்டு நல்வினைகளதும், தீவினைகளதும் பெறுபேறுகளைக் குழந்தைகளுக்கு விளக்குவதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கலாம்.[2]
வைகுண்ட ஏகாதசி
தொகுவைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுவதும் கண்விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பாண்மையான வைணவர்கள் விடியும் வரை விளையாடுவர். பாவம் செய்பவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும், புண்ணியம் செய்தால் திருமாலின் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் பொருட்டு இவ்விளையாட்டு அன்று வைணவர்களால் விளையாடப்படுகின்றது.
விளையாடும் முறை
தொகுதாயக்கட்டையை உருட்டுவதன் மூலம் காய்களை நகர்த்துவதாக இவ்விளையாட்டு அமைகிறது. இரண்டு முதல் பலர் விளையாடலாம். இதனை விளையாட சிறப்புத் தேர்ச்சிகள் எதுவும் வேண்டியதில்லை. பொதுவாக தொடங்குவதற்கு ஒருவர் "1" இனைத் தாயக்கட்டையில் பெற வேண்டியிருக்கும். பின்னர் மாறிமாறித் தாயக்கட்டைகளை உருட்டிக் கிடைக்கும் எண்ணிக்கைகேற்ப காய் நகர்த்தப்படும். ஏணியின் அடியை அடையும் காய் ஏணியின் உச்சிக்கும் பாம்பின் வாயை அடையும் காய் பாம்பின் வாலுக்கும் செல்லும். இந்தத் தடைகளைத் தாண்டி கடைசிக் கட்டத்தை அடையும் காய் வெற்றியடையும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chutes and Ladders". boardgamegeek. பார்க்கப்பட்ட நாள் 1 June 2020.
- ↑ Pritchard, D.B. (1994), "Snakes and Ladders", The Family Book of Games, Brockhampton Press, p. 162, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86019-021-9