பரிகாரக் கற்பித்தல்
கற்றலில் பின்னடைவான, கற்றல் இடர்ப்பாடுடைய மற்றும் மந்தமாகக் கற்கின்ற மாணவர்களை கற்றலில் மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் விசேட கற்றல் கற்பித்தல்(Remedial Teaching) செயற்பாடு ஆகும்.
பரிகாரக் கற்பித்தலின் நோக்கம்
தொகுமாணவர்கள் வெவ்வேறு திறன்களும் உளத்தன்மைகளும் கொண்டவர்களாக உள்ளனர். இதற்கேற்ப மாணவர்களின் அடைவுகளும் இவ்வடைவுகளை ஈட்டும் தன்மைகளும் மாணவருக்கு மாணவர் வேறுபட்டதாகக் காணப்படுகிறது. மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளுக்கும் உளத் தேவைகளுக்கும் சார்பாக மாணவர்கள் தம் கல்வியில் உச்ச அடைவினைப் பெறும் சூழலை ஏற்படுத்துவதும், தோன்றும் தடைகளை நீக்குவதும் பரிகாரக் கற்பித்தலின் நோக்கம் ஆகும்.
பரிகாரக் கற்பித்தலில் பின்பற்ற வேண்டிய கொள்கைகள்
தொகு- மாணவர்களைத் திறமையானவர்கள் பின்னடைவானவர்கள் எனப் பிரித்து ஒதுக்கும் செயற்பாடல்ல.
- மாணவர்களின் உள்ளார்ந்த செயற்பாடுகளையும் தனித்துவத்தையும் அறிந்து அதற்கேற்ப கற்பிக் முனையும் செயற்பாடு ஆகும்.
- பரிகாரக் கற்பித்தல் விசேட கற்பித்தல் திட்டத்துடன் மாணவர் ஊக்குவிப்பத் திட்டத்தையும் கொண்டது.
- பரிகாரக் கற்பித்தல் மாணவர்களிடையே கற்றலில் தன்னம்பிக்கையையும் சுய ஊக்கத்ததையும் உண்டுபண்ணும்.
- பரிகாரக் கற்பித்தல் பின்னடைவான மாணவர்களுக்கு பொதுவாகப் பொருந்தினாலும் மீத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் தேவையாகும்.
பரிகாரக்கற்பித்தலின் படிமுறைகள்
தொகு- இடர்ப்பாடுள்ள பிள்ளைகளை இனங்காணுதல்
- இடர்ப்பாட்டினைக் கண்டறிதல்.
- இடர்ப்பாட்டின் தன்மையைக் பகுப்பாய்தல்
- இடர்பாட்டினை நீக்குவதற்கான அணுகுமுறைகளை வகுத்தல்
- அணுகுமுறைகளை நடைமுறைபப்டுத்தல்
- மீளவலியுறுத்தல்
- கணிப்பீடு செய்தலும் பின்னூட்டலும்