பரிணாமித்த விண் சீரொளி குறுக்கீட்டுமான உணரி

ஈர்ப்பு அலைகளை அளவிடுவதற்கான ஐரோப்பிய விண்வெளி திட்டம்

பரிணாமித்த விண் சீரொளி குறுக்கீட்டுமான உணரி அல்லது எலீசா (Evolved Laser Interferometer Space Antenna or eLISA) (இது விண் சீரொளி குறுக்கீட்டுமான உணரி (Laser Interferometer Space Antenna) என அறியப்பட்டது) என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தால் (ஈசா) ஈர்ப்பு அலைகளை துல்லியமாக அளக்க முன்வைக்கப்பட்ட செயல்திட்டமாகும்[1].

பரிணாமித்த விண் சீரொளி குறுக்கீட்டுமான உணரி
கலைஞனின் கருத்துருவம்
இயக்குபவர்ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
திட்ட வகைவானியற்பியல்
செயற்கைக்கோள்சூரியன்
ஏவப்பட்ட நாள்2034 (முன்மொழியப்பட்டது)
இணைய தளம்www.elisascience.org
சுற்றுப்பாதை உறுப்புகள்
சுற்றுக்காலம்1 வருடம்

இது விண்ணில் அமையும் முதலாவது ஈர்ப்பு அலைகளை கண்டறியும் கருவியாக இருக்கும். இது ஈர்ப்பு அலைகளை சீரொளி குறுக்கீட்டுமானி மூலம் நேரடியாக அளக்கும். மூன்று விண்கலங்கள், ஒன்றுகொன்று 1 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில், சமபக்க முக்கோண வடிவில் பூமியைப்போல் சூரியனை சுற்றிவரும். இந்த மூன்று விண்கலங்களுக்கிடையேயான தூரத்தை துல்லியமாக அளவிடுவதன் மூலம் கடக்கும் ஈர்ப்பு அலைகள் அளவிடப்படும்.

இத்திட்டத்தின் முன்னோடியாக லீசா வழிதேடி (LISA Pathfinder) விண்கலம் 2015 டிசம்பர் 3 ஏவப்பட்டது[2]. லீசா வழிதேடி ஈர்ப்பு அலைகளை அவதனிக்காது, இது எலீசாவில் பயன்படுத்தவுள்ள புதிய தொழில்நுட்பங்களை பரிசோதிக்கும்.

லீசா திட்டம் நாசா மற்றும் ஈசா வின் கூட்டு முயற்சியாக ஆரம்பித்தது. நிதி நெருக்கடி காரணமாக 2011 இல் நாசா இத்திட்டத்தை கைவிட்டது. ஈசா திட்டத்தை சுருக்கி எலீசா என்ற பெயரில் முன்னேடுக்கிறது. ஈசா விண்கலங்களை 2034 இல் ஏவ திட்டமிட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. eLISA Gravitational Wave Observatory
  2. ESA LISA Pathfinder overview