பரிதாலா ஆஞ்சநேயர் கோயில்
பரிதாலா ஆஞ்சநேயர் கோயில் (Paritala Anjaneya Temple) என்பது பகவான் அனுமன் கோயிலாகும். இந்தக் கோயில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விஜயவாடாவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அமைக்கப்பட்டுள்ள அனுமன் சிலை, உலகிலேயே பகவான் அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டாவது மிக உயரமான சிலை என்ற பெருமையினை 155 அடி 2 அங்குல உயரம் கொண்ட சிலை, சோலனில் உள்ள மானவ் பாரதி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட மற்றொரு சிலையால் மாற்றப்பட்டுள்ளது. தற்போதைய சாதனையானது வடக்கு ஆந்திராவில் (171 அடி) வம்சதாரா நதிக்கரையில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள மடப்பத்தில் உள்ள சிலை பெற்றுள்ளது. இது லிம்கா சாதனைகள் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோயில் தேசிய நெடுஞ்சாலை-65-ல் விஜயவாடாவிலிருந்து சுமார் 30 கி. மீ. தொலைவில் பரிதலா கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த சிலை 2003 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் உயரம் 135 அடிகள் (41 மீட்டர்கள்) ஆகும்.[1]
ஆஞ்சநேயர் சிலை, பரிதாலா ஆஞ்சநேயர் கோயிலில் | |
ஆள்கூறுகள் | 16°38′49″N 80°25′24″E / 16.64688°N 80.423339°E |
---|---|
இடம் | விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
வகை | சிலை |
கட்டுமானப் பொருள் | கான்கிரிட் |
உயரம் | 135 அடிகள் (41 m) |
திறக்கப்பட்ட நாள் | 22 சூன் 2003 |
இந்தியாவிற்கு வெளியே உள்ள மிக உயரமான அனுமான் சிலை காரபிசைமா, டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ளது.. இது 85 அடி உயரம் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Paritala Anjaneya Temple, Vijaywada". Times of India Travel. பார்க்கப்பட்ட நாள் 2020-07-22.