பரிதா அக்தர் பபிதா

வங்கதேச திரைப்பட நடிகை

பரிதா அக்தர் பபிதா, (Farida Akthar Babitha) என அழைக்கப்படும், பரிதா அக்தர் பாப்பி ஒரு வங்க தேசத் திரைப்பட நடிகை ஆவார். அவரது மேடைப் பெயரான பபிதாவால் மக்களிடம் நன்கு அறியப்படுகிறார். இவர் 1970 களில் வங்காளதேசப் படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக உள்ளார். 1943 ஆம் ஆண்டு வங்காள பஞ்சத்தைப் பற்றிய ஒரு புதிய தழுவலான சத்யஜித் ரேயின் அஷானி சங்கத் என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளதால் மிகவும் பிரபலமானவராக உள்ளார். 1973 ஆம் ஆண்டில் 23 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் பியர் பரிசை அத் திரைப்படத்தில் நடித்ததற்காக பெற்றுள்ளார். மேலும் இவர் 1970 முதல் 1990 வரை உள்ள காலத்தில் வங்க தேசப் படங்களில் முக்கிய நடிகையாக செயல்பட்டார். [1]

பபிதா, 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1975 இல் தேசிய திரைப்பட விருதை வென்ற பிறகு, இவர் தொடர்ந்து மூன்று சிறந்த நடிகைக்கான பரிசுகளை வென்றார். மேலும், இவர் 1986 இல் சிறந்த நடிகைக்கான விருதையும், 1997 இல் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதையும் பெற்றுள்ளார். மேலும், 2002 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். கூடுதலாக, 2016 ஆம் ஆண்டில் தேசிய திரைப்பட விருதான வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

பபிதா மேற்கு வங்கதேச மாவட்டமான ஜெஸ்சூரில் ஒரு படித்த குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை நிசாமுதீன் அதாப் அரசாங்க அதிகாரியாகவும், தாய் சகான் அரா பேகம் ஒரு மருத்துவராகவும் இருந்தனர். தந்தையின் வேலை காரணமாக அவர்கள் பாகர்காட்டில் இருந்தனர். இவரின் புனைப்பெயர் பாப்பி ஆகும். இவருக்கு மூன்று சகோதரிகள் மற்றும் மூன்று சகோதரர்கள் உள்ளனர். பபிதாவின் தாய் கொல்கத்தாவில் உள்ள லேடி பிராபோர்ன் கல்லூரியில் படித்தவர். 2004 ஆம் ஆண்டில் இன்டிபென்டன்ட் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், பபிதா என்ற திரைப் பெயரை தனக்கு பரிந்துரைத்தவர் அப்சல் சவுத்ரி என்று கூறுகிறார். 2005 ஆம் ஆண்டில் டெய்லி ஸ்டார் உடனான மற்றொரு நேர்காணலில், சாகிர் எரைகான் முதலில் சோங்சார் படத்திற்காக தன்னை நடிக்க வைத்ததாக குறிப்பிடுகிறார். [2] மேலும், எத்தேஷாமின் 'பிட்ச் தலா பாத்' திரைப்படத்தில் நடித்த பின்னர் பரிதா அக்தர், பபிதா என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். [3]

பபிதாவின் மைத்துனர் ஜாஹிர் ரைஹான் தனது ஜால்டி சூரஜ் கா நிச்சே திரைப்படத்திற்காக இவரை முதலில் நடிக்க வைத்தார். அத் திரைப்படம் நிறைவடையவில்லை. அதனால் டாக்கா திரையுலகில் ஒரு இடைவெளியைக் கண்டார். அவரது முதல் வெளியிடப்பட்ட திரைப்படம் ஷேஷ் போர்ஜோன்டோ ஆகும்.


இவருக்கு மூன்று சகோதரிகள் மற்றும் மூன்று சகோதரர்கள் உள்ளனர். அவர்களில் மூத்த சகோதரி சுச்சந்தா ஒரு பிரபல திரைப்பட நடிகையாவார். மூத்த சகோதரர் ஷாஹிதுல் இஸ்லாம் ஒரு மின் பொறியாளராகவும், மற்றொரு சகோதரர் இக்பால் இஸ்லாம் ஒரு பைலட் அதிகாரியாகவும் உள்ளனர். இவரது இளைய சகோதரி சம்பா ஒரு திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இளைய சகோதரர், ஃபெர்டஸ் இஸ்லாம் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

கல்விதொகு

பபிதா தனது ஆரம்ப நாட்களில் ஜெஸ்சூரில் உள்ள தாவூத் பப்ளிக் பள்ளியில் படித்தார். அங்கு படிக்கும் போது, தனது சகோதரி திரைப்படத்தில் நடிக்க வந்ததால், இவர் தனது குடும்பத்துடன் டாக்காவுக்கு வந்தார். பின்னர் இவர் குளோரியா பள்ளியில் படித்தார். சில வெளிநாட்டு மொழிகள் உட்பட ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றார். ஒரு சிறந்த கலைஞரின் நிலைக்கு இவர் தன்னைச் செம்மைப்படுத்திக் கொண்டார். [4]

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

பபிதாவின் மகனுக்கு மூன்று வயதாக இருந்தபோது பபிதாவின் கணவர் இறந்துவிட்டார். [5] அவரது இரண்டு சகோதரிகள் சுச்சந்தா மற்றும் சம்பா திரைப்பட நடிகைகளாக உள்ளனர். [6]

குறிப்புகள்தொகு

  1. "Babita Akhtar". distressedchildren. 2015-10-07 அன்று பார்க்கப்பட்டது.
  2. . http://archive.thedailystar.net/2005/06/28/d506281403110.htm. 
  3. . http://thedailystar.net/2005/05/06/d505061403105.htm. 
  4. "ববিতা / Babita (1955) - Jessore, Jhenaidah, Magura, Narail". jessore.info. 2019-07-16 அன்று பார்க்கப்பட்டது.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-09-05. https://web.archive.org/web/20170905114915/http://www.prothom-alo.com/we-are/article/471514/%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AA%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF. 
  6. ""Teen Kanya" on queue". The Daily Star. 3 October 2016. 2 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிதா_அக்தர்_பபிதா&oldid=3219870" இருந்து மீள்விக்கப்பட்டது