பரிதா அசிசி
பரிதா அசிசி (Farida Azizi) அமைதி மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஆப்கானித்தான் நாட்டு வழக்கறிஞராவார். ஆப்கானித்தானை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதில் பெண்களின் பங்கு குறித்து ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மற்றும் இலாரி கிளிண்டனுடன் அசிசி ஆலோசனை நடத்தியுள்ளார். ஆப்கானித்தானில் அமைதி மற்றும் ஒற்றுமைக்கான நிறுவனத்தின் நிறுவனர் உறுப்பினராகவும், ஆப்கானித்தான் மகளிர் வலையமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார்.[1] ஏழு என்ற ஒரு நாடகத்தில் பரிதா அசிசியின் கதையும் ஒரு கூறாகும்.
சுயசரிதை
தொகுகெசுகி பழங்குடியினரின் துணை குலமான அசிசி பசுடூன்களின் பணக்கார மற்றும் முக்கியமான ஒரு குடும்பத்தில் பரிதா அசிசி பிறந்தார்.[2][3] இவருடைய தந்தை ஆப்கானித்தான் இராணுவத்தில் மருத்துவராகப் பணிபுரிந்தார்.[2] 1979 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானை ஆக்கிரமித்தது. அசிசி மற்றும் அவரது குடும்பத்தினர் பாக்கித்தானில் உள்ள அகதி முகாம்களுக்கு தப்பிச் சென்றனர். சிறிது காலம் அசிசி ஒரு தற்காலிகப் பள்ளியில் படித்தார். ஆனால் முகாமில் உள்ள பழமைவாத மதத் தலைவர்கள் (முசாகிதீன் ) கல்வியை இசுலாமியமற்றதாக அறிவித்தனர். பெண்களின் கல்விக்கு எந்த தடையும் இல்லை என்று குர் ஆனிலிருந்து மேற்கோள் காட்டி அசிசியின் தந்தையும் தாயும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவர்கள் மத பழமைவாதிகளுக்கு எதிராக வெற்றி பெற இயலவில்லை. அசிசியின் தாயார் முகாமில் இறந்தார். சோவியத் இராணுவத்திற்கு எதிராக போராட நியமிக்கப்பட்ட காரணத்தால் அவரது சகோதரர் ஒருவரும் பின்னர் கொல்லப்பட்டார்.[4]
அசிசி கல்வியை முடிக்க முடியாமல் போனதால் திருமணம் செய்துகொண்டு காபூலுக்கு திரும்பினார். இருப்பினும், அசிசிக்கும் அவருடைய இளம் குடும்பத்திற்கும் உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது, அதனால் அவர்கள் பெசாவர் திரும்பினர்.[4]
1996 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், நோர்வே தேவாலய உதவிக்கான ஆப்கானித்தான் மகளிர் திட்டத்தை அசிசி மேற்பார்வையிட்டார்.[5] பாகித்தானில் வசிக்கும் இவர், தனது கிராமத்தில் இருந்து ஆப்கானித்தானுக்கு "கிராமப்புறங்களில் உள்ள பெண்களை ஆதரிப்பதற்காகவும், பெண்களுக்கு ஆரோக்கியம், வருமானம் ஈட்டுதல் மற்றும் கல்வித் திட்டங்களுக்கு உதவுவதற்காகவும் பயணம் செய்வார். மக்கள் பொருட்களை கொண்டு வருவதை தடுப்பதற்காக தலிபான்கள் சாலை மறியல்களை அமைத்தனர். அதனால் இவர் பாதுகாப்பாக நாட்டிற்குள் நுழையவேண்டியிருந்தது. ஒரு மகளிர் மருத்துவராக மாறுவேடமிட்டு, கண்களை மட்டும் மூடாமல் பர்தா அணிந்தார்.
1999 ஆம் ஆண்டில் அசிசி கிழக்கத்திய மெர்னோனைட் பல்கலைக்கழகத்தில் மூன்று மாத பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வர்சீனியா நகரத்திற்குச் சென்றார். திரும்பி வந்தபோது, "பெண்கள் சார்பாக செயல்பட்டதற்காகவும், அமைதியை ஆதரிக்கும் குழந்தைகள் பத்திரிகைகளைத் திருத்தியதற்காகவும்" தாலிபான்களால் அசிசி அச்சுறுத்தப்பட்டார். அசிசி அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்தார். அவர் அமெரிக்காவிற்கு வந்தபோது, 2001 ஆம் ஆண்டு ஆட்சிக்குழுவின் விசாரனைக்கு உட்பட்டார்.
அமெரிக்கத் தொழிலாளர் துறை மற்றும் பிற தனியார் நிறுவனங்களுடன் இணைந்து 2002 ஆம் ஆண்டில் ஆப்கானிய பெண் மாணவர்களுக்கான பொருட்களை சேகரித்து விநியோகித்தார். 2003 ஆம் ஆண்டு இவர் மீண்டும் ஆப்கானித்தான் நாட்டிற்குத் திரும்பினார். கடவுச்சீட்டு கணவனிடம் சிக்கிக்கொண்டதால் இவரால் காபூலை விட்டு வெளியேற முடியாமல் போனது. அங்கு இருந்தபோது, மிகவும் நோய்வாய்ப்பட்டார், மீண்டு வரமுடியாத நிலைக்கு சென்றவர் பின்னர் குணமடைந்தார்.
ஏழு என்ற ஆவணப்படத்தில் அசிசியின் கதையும் இருந்தது. உரூத் மார்கிராப் இதற்கான கதையை எழுதியிருந்தார். அனெட் மகேந்திரு நடித்தார்.[6] and played by actress Annet Mahendru.[7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Margraff, Ruth (2009). "Night Wind". Seven (1st ed.). Dramatists Play Service. pp. 92–93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0822223511.
- ↑ 2.0 2.1 Gehrke-White, Donna (2006). The Face Behind the Veil: The Extraordinary Lives of Muslim Women in America. New York: Citadel Press. pp. 176–183. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780806527222.
- ↑ Rashid, Haroon (2002). History of the Pathans: The Sarabani Pathans (in ஆங்கிலம்). Haroon Rashid.
- ↑ 4.0 4.1 Boustany, Nora (20 February 2004). "A Beacon, Even in the Darkest Hours". The Washington Post. https://www.washingtonpost.com/archive/politics/2004/02/20/a-beacon-even-in-the-darkest-hours/a02c634a-41a2-4fa9-af8d-e5d066604146/.
- ↑ "Project for Afghan Women's Leadership: Afghan Women Leaders Speak" (PDF). Mershon Center for International Security Studies. Ohio State University. November 2005. பார்க்கப்பட்ட நாள் 13 September 2015.
- ↑ "The Women & The Playwrights". Seven - A documentary Play. பார்க்கப்பட்ட நாள் 13 September 2015.
- ↑ Seven, 2017, பார்க்கப்பட்ட நாள் 14 February 2021
- ↑ Lauren Young (26 January 2017), The Women of “Seven”, Msmagazine, பார்க்கப்பட்ட நாள் 14 February 2021