பரிதியார்
திருக்குறள் பழைய உரையாசிரியர்கள் பதின்மரில் ஒருவர்
திருக்குறள் பழைய உரையாசிரியர்கள் பதின்மரில் பரிதியாரும் ஒருவர். இவர் பெயரைப் ‘பருதியார்’ எனவும் எழுதுவர். காலிங்கர் உரைக்கு முற்பட்டது
- காலம் 13ஆம் நூற்றாண்டு.
இவர் உரை. மணக்குடவரின் திருக்குறள் வைப்புமுறையை மாற்றி இவர் தனக்கென ஒர் வைப்புமுறையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். இவரது உரை சுருக்கமாக, செய்தி விளக்கமாக உள்ளது.
எடுத்துக்காட்டு
சமயம்
தொகு"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு" என்னும் திருக்குறளுக்கு உரை எழுதும்போது "எந்தத் தேசமேயானாலும் தன் தேசமேயாம்; மால் ஊராகிய வைகுண்டப் பதம் மறுமைக்கு ஆம். அதனால் சாம் அளவும் கல்வியே பயிலுவான்" என்று குறிப்பிடுகிறார்.[4] இதனால் இவர் வைணவ சமயத்தவர் எனத் தெரிகிறது.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
- திருக்குறள் உரைக்கொத்து, தா. ம. வெள்ளைவாரணம் பதிப்பு, திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் வெளியீடு, 1983
அடிக்குறிப்பு
தொகு- ↑ சிறப்பொடு பூசனை செல்லாது - என்னும் குறளுக்கு (18)
- ↑ அல்லல் அருளாள்வார்க்கு இல்லை – என்னும் குறளுக்கு (245)
- ↑ முகநக நட்பது நட்பன்று – என்னும் குறளுக்கு (786)
- ↑ திருக்குறள் பரிமேலழகர் வரிசை எண் 397, பரிதியார் வைப்பு வரிசை எண் 392 உரை, திருக்குறள் உரைக்கொத்து பொருட்பால், ஸ்ரீ காசி மடம் - திருப்பனந்தாள், 1990