பருண் டே

பருண் டே (Barun De அக்டோபர் 30, 1932—சூலை 16, 2013) வரலாற்றாய்வாளர், கல்வியாளர், ஆசிரியர், நூலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர். கல்கத்தா சமூக அறிவியல் மையத்தை நிறுவி இயக்குநராக இருந்தார். மவுலானா அபுல் கலாம் ஆசாத் ஆசிய கல்வி நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.

பருண் டே
பிறப்பு30 அக்டோபர் 1932
கொல்கத்தா
இறப்பு16 சூலை 2013 (அகவை 80)
கொல்கத்தா
பணிஅரசு ஊழியர்

இளமையும் கல்வியும்தொகு

பருண் டே தம் தொடக்கக் கல்வியை ஆக்ராவிலும் பின்னர் கல்கத்தா தூய சேவியர் கல்லூரியிலும், கல்கத்தா மாநிலக் கல்லூரியிலும் இளங்கலை வரலாறும் முதுகலையும் பயின்றார். ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

பணிகள்தொகு

பருண் டே கல்கத்தா பல்கலைக் கழகம், பர்த்வான் பல்கலைக் கழகம், டியூக் பல்கலைக்கழகம், சிட்னி பல்கலைக்கழகம், இந்திய மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றில் ஆசிரியராகப் பணி செய்தார். நவீன இந்தியாவின் வரலாற்றை ஆய்வு செய்தார். 17 ஆம் நூற்றாண்டு மற்றும் 18 ஆம் நூற்றாண்டு சமூகப் பொருளியல் வரலாறு எழுதினார். பிபன் சந்திரா, அமலேசு திரிபாதி ஆகிய வரலாற்று ஆசிரியர்களுடன் இணைந்து விடுதலைப் போராட்டம் என்னும் மதிப்பிடு செய்து நூல் எழுதினார். தொடக்கக் காலத்தில் இந்தியாவில் பிரிட்டிசு ஆட்சி பற்றியும் பிற்காலத்தில் வங்க மறுமலர்ச்சி பற்றியும் எழுதினார். அவருடைய ஆசிரியர் சுசொமன் சர்க்கார் பற்றியும் கட்டுரைகள் எழுதினர். செக்குலரிசம் அட் தி பே : உஸ்பெஸ்கிஸ்தான் அட் தி டர்ன் ஆப் செஞ்சுரி என்பது அவர் எழுதியவற்றில் சிறந்த நூல் எனக்கருதப்படுகிறது.

உசாத்துணைதொகு

http://www.amazon.in/Secularism-Bay-Uzbekistan-Turn-Century/dp/8173046069

http://www.thehindu.com/news/national/historian-barun-de-passes-away/article4925062.ece

http://www.telegraphindia.com/1130718/jsp/calcutta/story_17126553.jsp#.Vj99ldIrJdg

"https://ta.wikipedia.org/w/index.php?title=பருண்_டே&oldid=2734327" இருந்து மீள்விக்கப்பட்டது