பருத்தி சேலை
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
4.5 முதல் 8 மீட்டர் வரையிலான நீளமும், ஒரு மீட்டர் அகலமும் கொண்ட பருத்தி நூலினால் நெய்யப்பட்ட ஆடை தான் பருத்தி சேலையாகும். தைக்கப்பட்ட துணியான இந்த பருத்தி சேலை, வெவ்வேறு விதமான முறைகளின்படி இந்தியப் பெண்களினால் கட்டப்படுகிறது. சேலையின் ஒருமுனை இடுப்பினைச் சுற்றி இருக்கும்படியும் மற்றொருமுனை தோள் பகுதியில் தளர்வாக இருக்கும்படியும் பொதுவாக கட்டப்படுவதுண்டு. சில வேளைகளில் தளர்வாக தோள்பகுதியில் போடப்படும் மறுமுனையும் இடுப்பில் அழுத்தியவாறு உட்புறம் மடித்தும் வைக்கப்படுவதுண்டு.[1]
பெண்களின் அழகினை எடுத்துக்கூறுமாறு இந்த பருத்தி சேலைகள் இருப்பதால், உலகம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான பெண்களினால் இந்த ஆடை விரும்பி அணியப்படுகிறது.
தோற்றம்
தொகுபழங்கால ஆடையாக இருந்திருந்தும் பெருமளவில் மாற்றமடையாமல் இன்றளவும் அணியப்பட்டுவரும் ஆடைகளில் பருத்தி சேலைகள் முக்கியமானது. இதன் தோற்றம் உங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கக்கூடியதாக இருக்கலாம், ஏனெனில் பருத்தி சேலைகள் மெசப்பட்டோமியர்களின் காலம் தொட்டே அணியப்பட்டு வருகிறது. கி.மு 3000 ஆண்டு காலகட்டத்தில் இருந்தே ஆடைகளை நெய்வதும், அதில் பிற முறைகளைச் சேர்ப்பதும் இருந்து வந்தது. அப்போதே, இந்த பருத்தி சேலைகள் இருந்துள்ளன. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிந்து சமவெளி நாகரீகத்தில்கூட பருத்தி ஆடைகள் மற்றும் நெசவு கலைத்திறன் பற்றிய குறிப்புகள் உள்ளன. பண்டைய ஆர்யர்கள் பருத்தியினை முக்கிய விவசாயமாகக் கொண்டு, அதன் பயன்பாட்டினை தாங்கள் இடம்பெயர்ந்த இடங்களுக்கும் கொண்டு சென்றனர்.[2]
சில மெல்லிய துணி வகைகளும், பருத்தி துணி வகைகளும் ஹரப்பா அகழ்வாய்வில் கண்டறியப்பட்டன. இதன் மூலம் பருத்தி ஆடைகளை ஹரப்பா நாகரீகம் பின்பற்றியது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சிந்து சமவெளி நாகரீக காலத்தில் வாழ்ந்த பெண்கள் ‘கச்சா’ முறையில் ஆடைகள் அணிந்ததாக நம்பப்படுகிறது. இம்முறையில் சேலையினை இடுப்பினைச் சுற்றி அணிந்து, பின்னர் கால்களுக்கு நடுவில் இழுத்து இடுப்பின் பின்புற பகுதியில் உட்புறமாக துணியினை மடித்து வைப்பர். இதன் மூலம் தோள்பட்டைக்கு செல்லும் தளர்வான மறுமுனை துணிப்பகுதி தவிர்க்கப்பட்டு எளிமையாக நடக்க முடிந்தது. இதே முறையிலான சேலை அணியும் திறன் சுமேரியர்கள், பாபிலோனியர்கள், அசீரியர்கள் மற்றும் பாரசீகர்களிடமும் காணப்பட்டது.[3]
ஆர்யர்கள் வடக்கு சமவெளி மற்றும் இந்தியாவின் தெற்குப் பகுதிக்கு இவ்வகை உடை அணியும் முறையினை கொண்டு வந்தனர். இப்படி சாதாரணமான ஆடையினை உடலினைச் சுற்றி கட்டுவதாக இருந்ததுதான், இன்று உலகம் முழுவது பருத்தி சேலைகள் பிரபலமாக அணியப்பட முன்னோடியாக அமைந்தது.
பருத்தி சேலைகளின் வகைகள்
தொகுஎளிமையான, நேர்த்தியான மற்றும் வசதியான வகையில் அணியும்படியாக அமைந்ததால் பெரும்பாலான பெண்களுக்கு பருத்தி சேலைகள் பிடித்தது. இதில் இடம், மாநிலம் அல்லது மொழி போன்ற பாகுபாடுகள் இல்லை.[1] அதிக மக்கள் தொகை, அதிகப்படியான கோடை வெயில் போன்றவை பருத்தி சேலைகளை விரும்ப காரணமாக இருக்கலாம். பருத்தி சேலைகளில் பல வகைகள் உள்ளன. அவை பின்வருமாறு:[4]
காதி : காதி பொருளால் ஆன இந்த வகை சேலைகள் நாட்டின் அனைத்து வகையான பெண்களிடமும் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளன.
வங்காள பருத்தி சேலை : இதன் மிருதுவான அமைப்பு மற்றும் பல்வேறு வகையான வடிவமைப்புகளின் காரணமாக பெரும் வகையில் பயன்படுத்தப்படுகிறது.
டாக்கை : பங்களாதேஷ் நாட்டில் தோற்றம் பெற்ற இந்த வகை சேலைகள், கொல்கத்தாவில் பூத்தையலுடன் தயாரிக்கப்பட்டு சாதாரண டாக்கை மற்றும் ஸம்தானி டாக்கை சேலைகள் என்ற பெயருடன் விற்கப்படுகின்றன. இதில் ஸம்தானி டாக்கை சேலைகள் தங்கநிற பூத்தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய அமைப்பில் இருக்கும்.
லக்னோவி சிகான் : லக்னோ பகுதியினை அடிப்படையாகக் கொண்ட இவை, துளையிடப்பட்ட வித்தியாசமான பூத்தையிலுடன் மாறுபட்ட வண்ணங்களைக் கொண்டிருக்கும்.
சாம்பல்பூரி : ஒடிசாவில் உருவாக்கப்படும் இவை, முந்தானைப் பகுதியில் விரிவான பூத்தையல் வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கும்.
சண்டேரி : இவை வேத காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதிகப்படியான வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்படும் இவை அணிபவரின் மதிப்பினை உயர்த்திக் காட்டுவதற்காக உருவாக்கப்படுகிறது.
ஜம்தானி : இவை சிக்கலான வடிவங்கள் மற்றும் வண்ணங்களுடன் கூடிய பருத்தி மற்றும் தங்க பூத்தையல் கொண்ட சேலைகளாகும். இவற்றின் வடிவங்கள் மற்றும் வண்ணங்கள் மிகவும் பிரபலமானவை
பிரபலம்
தொகுபருத்தி சேலைகளின் பிரபலம் அதன் மலிவான விலை, குறைந்த எடை, பல்வேறு வகைகளில் கிடைக்கும் தன்மை, இறுதி வேலைப்பாடுகள் மற்றும் வண்ணங்களின் தோற்றக் கலவை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையினைப் பொறுத்து அமைகிறது. உயர்தர நிகழ்ச்சிகள், திருமணங்கள் மற்றும் பிற விழாக்களுக்கு இவற்றினை அணிந்து செல்வது மதிப்புமிக்கதாகக் கருதப்படுகிறது. இதற்கெல்லாம் மேலாக பல்வேறு திரைப்பட நடிகைகளால் இவை விரும்பி அணியப்படுகின்றன.[5]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Saree story – the saree encyclopedia from saree.gallery". saree.gallery. பார்க்கப்பட்ட நாள் 9 July 2014.
- ↑ "The origin of the saree". esamskriti.com.
- ↑ "Cotton Sarees – The Magical Weaves of India". metromela.com. பார்க்கப்பட்ட நாள் 9 October 2013.
- ↑ "Types of cotton saree". shopping.rediff.com.
- ↑ "Sari". encyclopedia.com.