பருப்பு கடை (விளையாட்டு)
பருப்பு கடை, ”பருப்பு கடை” எனத் தொடங்கும் பாடலுடன் குழந்தைகளோடு தாய்மார் விளையாடும் விளையாட்டு.
முதலில் தாய் குழந்தையின் கையிலுள்ள ஒவ்வொரு விரலையும் தொட்டு, சோறு, பருப்பு, நெய், குழம்பு - என்று 10 விரலுக்கும் 10 சமைத்த உணவின் பெயரைச் சொல்வாள்.
பின்னர் குழந்தைகளின் தொடு-உணர்வை வலிமைபெறச் செய்யும் விளையாட்டு இது. குழந்தையின் கையை விரித்துப் பிடித்துக்கொண்டு தாய் தன் முழங்கையால் பருப்பு கடைவது போலச் செய்துகொண்டு பாடுவாள்.
- பருப்பு கடை பருப்பு கடை
- அப்பாவுக்குக் கொஞ்சம்
- அம்மாவுக்குக் கொஞ்சம்
- பாட்டிக்குக் கொஞ்சம்
- தாத்தாவுக்குக் கொஞ்சம்
- பாப்பாவுக்குக் கொஞ்சம்
எனச் சொல்லி ஊட்டுவதுவது போல நடிப்பாள்.
கடைசியில் குழந்தையின் கையை நீட்டிப் பிடித்து அதன்மேல் தன் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் லேசாக நடத்திக் கூசுமாறு செய்வாள். அப்போது கூச்சம் வராவிட்டால் கைகளின் தோள்பட்டைக்குக் கீழ் உள்ள கமுக்கட்டைத் தொட்டுக் கூசுமாறு செய்வாள்.
குழந்தையின் அழுகையை நிறுத்தவும் இந்த விளையாட்டைத் தாய் நடத்துவாள்.
இவற்றையும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- ஞா.தேவநேயப் பாவாணர், தமிழர் விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
- இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980