பருப்பு சட்டி (விளையாட்டு)
பருப்புச்சட்டி என்று சொன்னவர் ஓடித் தொடும் விளையாட்டு இது.
ஆடும் முறை
தொகுநிற்பவரைத் தொடலாம், உட்கார்ந்திருப்பவரைத் தொடக்கூடாது என விதி வைத்துக்கொண்டு ஓடித் தொடும் விளையாட்டு இது. விளையாடுவோர் கையைக் கோத்துக்கொண்டு சுற்றிவருவர்.
சுற்றும்போது பாட்டுப் பாடுவர்.
- விறகு விறகு
- வரகு வரகு
பல முறை சொல்வர்.
ஒருவர் எல்லாரையும் உட்காரச் சொல்வார். உட்கார்ந்த பின் உங்கள் வீட்டில் என்ன குழம்பு என அவர் கேட்பார்.
- கத்தரிக்காய்க் குழம்பு,
- முருங்கைக்காய்க் குழம்பு
என்றெல்லாம் பலரும் சொல்வர்.
ஒருவர் மட்டும் மேலும் காய்ப்பெயர் சொல்லத் தெரியாமல் பருப்புப் குழம்பு என்பார். அவரை எல்லாரும் பருப்புச்சட்டி என்பர். இப்படிப் பருப்புச்சட்டி ஆனவர் தொடவேண்டும்.
இது பட்டவரைத் தேர்ந்தெடுக்கும் முறைகளில் ஒன்று.
இவற்றையும் பார்க்க
தொகுகருவிநூல்
தொகு- ஞா.தேவநேயப் பாவாணர், தமிழர் விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954