பரூஉமோவாய்ப் பதுமனார்
பரூஉ மோவாய்ப் பதுமனார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 101 ஆகும்.[1]
மோவாயை இப்போது தாவாய் என்கிறோம். இப்புலவரது தாவாய் பருமனாகத் தோற்றமளித்ததால் இவரை இந்தப் பதுமனாரை உறுப்பால் அடையாளம் காட்டிக் குறிப்பிடலாயினர்.
பாடல் சொல்லும் செய்தி
தொகுபொருள் தரும் அறத்தால் புத்தேள் நாடு பெறலாம்.
அவன் அவளது தோள்மேல் கிடக்கும் உலகத்தையும், அவள் இல்லாத வீடுபேற்று உலகத்தையும் சீர்தூக்கிப் பார்க்கிறான். இரண்டு சமம் ஆகா என அவனுக்குப் படுகிறது. அவன் தோள்மேல் இருக்கும் நாளே மேன்மை உடையது என்று தீர்மானிக்கிறான். (அவளை அவன் பிரியவில்லை)