பரேகிபனி அருவி

இந்திய மாநிலமான ஒடிசாவில் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிம்லிபால் தேசிய பூங்காவில் அமைந்துள்ள இரண்டு அடுக்கு நீர்வீழ்ச்சிதான் பரேகிபனி அருவி (Barehipani Falls).[1] இது இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும்.[2]

பரேகிபனி அருவி
Barehipani Falls
பரேகிபனி அருவி
பரேகிபனி அருவி is located in ஒடிசா
பரேகிபனி அருவி
Map
அமைவிடம்மயூர்பஞ்சு மாவட்டம், ஒடிசா, இந்தியா
ஆள்கூறு21°56′01″N 86°22′49″E / 21.933576°N 86.380343°E / 21.933576; 86.380343
வகைஅடுக்கருவி
மொத்த உயரம்399 மீட்டர்கள் (1,309 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கை2
நீர்வழிபுத்தபாலங்கா ஆறு

அமைவிடம் தொகு

பரேகிபனி அருவி கிழக்குத் தொடர்ச்சி மலையின் மேகாசுனி மலையில் பாயும் புதபாலங்கா ஆற்றில் 21.932759N 86.380145E என்ற இடத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.[3] [4] இதன் அருகிலுள்ள தொடருந்து நிலையம் பாரிபாடாவில் உள்ளது. ஜோராண்டா அருவியும் இதன் அருகிலேயே அமைந்துள்ளது.[1] இது ஜாசிப்பூரிலிருந்து 120 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

அருவி தொகு

பரேகிபனி அருவியின் மொத்த உயரம் 399 மீட்டர்கள் (1,309 அடி) ஆகும். இது இரண்டு அடுக்கு நீர்வீழ்ச்சி ஆகும். இது இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த நீர்வீழ்ச்சி மற்றும் ஒடிசாவில் மிக உயரமான அருவி ஆகும். இதனுடைய ஒற்றை அடுக்கின் மிக உயரம் 259 மீட்டர்கள் (850 அடி) ஆகும்.[5]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Barehipani Falls". india9. Archived from the original on 29 June 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-06-22.
  2. "Showing all Waterfalls in India". World Waterfalls Database. Archived from the original on 2009-09-01. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
  3. "Barehipani & Joranda Falls". Only Travel Guide. Archived from the original on 13 May 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-06-22.
  4. Forest geology and soils. Periodical Expert Book Agency. https://books.google.com/books?id=keVOAQAAIAAJ. பார்த்த நாள்: 2019-10-22. 
  5. "Barehipani Falls". World Waterfall Database. Archived from the original on 2010-12-01. பார்க்கப்பட்ட நாள் 2010-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரேகிபனி_அருவி&oldid=3562059" இலிருந்து மீள்விக்கப்பட்டது