பர்குந்தா
பர்குந்தா (Farkhunda) என்பவர் ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலைச் சேர்ந்த 27 வயது பெண் ஆவார். 2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 19 ஆம் திகதி அங்குள்ள ஷா-டோ ஷாம்சிரா மசூதிக்குள் தொழுகைக்குச்சென்ற போது குரானை எரித்துவிட்டதாக எழுந்த தவறான தகவலால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.[1]
பர்குந்தா மாலிக்ஜாதாவின் கொலை | |
---|---|
மதவாத வன்முறை | |
இடம் | காபுல், அப்கானிஸ்தான் |
ஆள்கூறுகள் | 34°31′31″N 69°10′42″E / 34.52528°N 69.17833°E |
நாள் | 19 மார்ச்சு 2015 |
தாக்குதல் வகை | கூட்டத்தினரால் அடித்துக் கொல்லப்படுதல் |
இறப்பு(கள்) | 1 (பர்குந்தா மாலிக்ஜாதா) |
நிகழ்வு
தொகுகாபூலில் அமைந்துள்ள ஷா-டோ ஷாம்சிரா மசூதிக்கு பர்குந்தா தொழுகைக்குச் சென்றபோது, அவர் குரானை எரித்துவிட்டதாகச் சிலர் வெளியில் ஒரு தகவலைச் சொன்னார்கள். அது நகர் முழுவதும் பரவியதால் ஏராளமான ஆட்கள் கூடி அவளை மசூதிக்கு வெளியில் இழுத்துவந்து அடித்துக் கொன்றனர்.[2] அவரின் உயிர் பிரிவதற்குள் அந்த நகரில் ஓடும் ஆற்றங்கரைக்கு எடுத்துச்சென்று எரித்தனர். ஆனால் இதை ஆயிரக்கணக்கானோர் சுற்றி நின்று வேடிக்கை மட்டும் பார்த்தனர். அப்போது தீயணைப்பு வீரர்கள் அப்பெண்ணின் உடலை மீட்டுச்சென்றனர்.
விசாரணை
தொகுஆப்கானிஸ்தான் காவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இவர் நிரபராதி என்று தெரிய வந்துள்ளது. அதனால் இவரின் சாவுக்கு நியாயம் கேட்டு ஏராளமான பெண்கள் காபூல் நகரில் ஊர்வலம் சென்றனர்.[3]