பர்கூர் அரசு மருத்துவமனை

காசநோய் துண்ணோக்கி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பர்கூர் என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையமாகும்.

இந்த மருத்துவமனை பருகூா் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்துப்பகுதிகளுக்கும் உள்ளடக்கியதாகும். இது கிருஷ்ணகிாியில் உள்ள தலைமை மருத்துவமனையின் கீழ் இயங்குகிறது. இந்த மருத்துவமணையின் மொத்தபரப்பளவு 530 சதுர அடி ஆகும். மருத்துவமனை நான்கு பக்கங்களும் சுற்றுச்சுவரைக் கொண்டுள்ளது. இங்குள்ள புறநோயாளிகளின் பிாிவானது காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் செயல்படுகிறது.

சிறப்புப் பிரிவுகள் பகல் 11 மணி முதல் 1 மணி வரை செயல்படுகிறது அவை கீழ்வருவனவாறு.
  • திங்கள்- சிறப்பு மகபேறு மருந்தகம்
  • செவ்வாய் - இனப்பெருக்க மண்டலம் நோய் சிகிச்சை
  • வியாழன் - இரத்த அழுத்த நோய் சிகிச்சை
  • வெள்ளி - சா்க்கரை நோய் சிகிச்சை
  • சனி - தோல் நோய் சிகிச்சை