பர்ஜர் நோய்

பர்ஜர் நோய் தொகு

இது இளைஞர்களிடம் உண்டாகும் சிறுதமனி அழற்சி நோய் ஆகும் . இதனால் பல சமயங்களில் குருதி ஓட்டம் பாதிக்கப்பட்டு ஆறாத புண் உண்டாகும் . புகையிலை பிடிப்போர், புகையிலை பயன்படுத்துவோர் ஆகியோரிடம் இந்நோய் காணப்படுகிறது . இந்நோய் பெரும்பாலும் கால்களில் உள்ள சிறுதமனியைப் பாதிக்கிறது.

நோயின் தன்மை தொகு

முதலில் சிரை அலர்ஜியால் மேல்புறத்தில் கசிவு உண்டாகும். அந்த இடத்தில் தோல் சிவப்பாகவும், தொட்டால் வலியுடனும் இருக்கும். மிகக் குளிராக இருக்கும்போது விரல் முதலில் வெண்மை நிறமாகவும், பின்னர் நீல நிறமாகவும், இறுதியில் சிவப்பாகவும் மாறும். நடக்கும் போது பாதத்தில் வலி உண்டாகும். சிறிது ஓய்வு எடுத்ததால் வலி குறைவும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட தசையில் வலி அதிகம் இராது. ஏனெனில் இது கணுக்காலுக்கு மேலே உள்ள பெரிய தமனியை அதிகம் பாதிப்பது இல்லை. சில நேரங்களில் இந்நோய் கைகளை பாதிப்பதுண்டு .

அறிகுறி தொகு

பாதங்களில் மிகைச் சிவப்பாக இருக்கும். தொடை, முழங்கால் கீழ்ப்பள்ளத் தமனிகளில் உள்ள சிறு தமனிகளில் நாடித்துடிப்பு இராது.

மருத்துவம் தொகு

இந்நோயின் போது புகையிலையை எந்த வடிவிலும் பயன்படுத்தக்கூடாது.

[1]

பகுப்பு கரூர் மாவட்ட ஆசிரியர்கள் எழுதிய கட்டுரை

  1. A.J. harding rains and H.David ritchie, bailey& loves, short practice of surgery, seventheeenth edition, H.W. lewis & co,Ltd, london, 1977
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்ஜர்_நோய்&oldid=3583382" இலிருந்து மீள்விக்கப்பட்டது