பர்தூர் மாகாணம்

பர்தூர் மாகாணம் ( துருக்கியம்: Burdur ili) என்பது துருக்கியின் ஒரு மாகாணம் ஆகும். இது துருக்கியின் தென்மேற்கில் அமைந்துள்ளது. இதன் எல்லையாக தெற்கே முக்லா மற்றும் அந்தால்யா, மேற்கில் டெனிஸ்லி, வடக்கே அஃபியோன் மற்றும் கிழக்கில் இஸ்பார்டா ஆகிய மாகாணங்கள் உள்ளன. மாகாணத்தின் பரப்பளவு 6,887  கிமீ 2 ஆகும். மக்கள் தொகையானது 258,868 ஆகும். மாகாணத் தலைநகராக பர்தூர் நகரம் உள்ளது.

பர்தூர் மாகாணம்
Burdur ili
துருக்கியின் மாகாணம்
துருக்கியில் பர்தூர் மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் பர்தூர் மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பகுதிமத்திய தரைக்கடல் பிரதேசம்
துருக்கியின் இரண்டாம் நிலை துணைப்பகுதிஅந்தால்யா மாகாணம்
அரசு
 • தேர்தல் மாவட்டம்பர்தூர்
 • ஆளுநர்அலி ஆர்ஸ்லாண்டா
பரப்பளவு
 • மொத்தம்6,887 km2 (2,659 sq mi)
மக்கள்தொகை (2018)[1]
 • மொத்தம்2,69,926
 • அடர்த்தி39/km2 (100/sq mi)
தொலைபேசி குறியீடு0248
வாகனப் பதிவு15

இந்த மாகாணமானது துருக்கியின் ஏரிகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. மாகாணத்தில் பல்வேறு அளவிலான பல ஏரிகள் உள்ளன. அவற்றில் மிகப் பெரியது, பர்தூர் ஏரி ஆகும். இந்த ஏரியின் பெயரைக் கொண்டே மாகாணத்தின் பெயர் அமைந்துள்ளது. சால்டா ஏரி மாகாணத்தின் இரண்டாவது பெரிய ஏரியாகும், இது உலகின் தூய்மையான ஏரிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

மாவட்டங்கள் தொகு

பர்தூர் மாகாணம் 11 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து சுட்டபட்டுள்ளது):

 • அலாசுன்
 • அல்தன்யாயிலா
 • புகாக்
 • பர்தூர்
 • கேவ்டியர்
 • செல்டிகட்சி
 • கோலிசார்
 • கரமன்லே
 • கெமர்
 • டெஃபென்னி
 • யெசிலோவா

காட்சியகம் தொகு

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்தூர்_மாகாணம்&oldid=3070763" இருந்து மீள்விக்கப்பட்டது