பர்னா (Parna) என்பது காற்றினால் அடித்துச் செல்லப்படும் வண்டல் படிவு ஆகும். பல வழிகளில் இது லோயசை ஒத்திருக்கிறது [1]. தென்கிழக்கு ஆத்திரேலியாவின் விவசாயப் பகுதியான ரிவெரினா சமவெளியில் இவ்வண்டல் காணப்படுகிறது. பொதுநலவாய அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வுகள் நிறுவனத்தில் பணிபுரிந்த மண்ணியல் விஞ்ஞானி புருசு பட்லர் 1956 ஆம் ஆண்டில் இவ்வண்டலுக்கு பர்னா என்ற பெயரை சூட்டினார் [2]. லோயசைப் போன்றே பர்னாவும் காற்றினால் படியும் மணற்படிவுதான், ஆனால் இதன் துகள்கள் சிறிய களிமண் கனிமங்களின் திரட்டாக உள்ளன. ஏரிகள் மற்றும் நதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உலர்ந்து போயிருக்கும் பகுதிகள் இதற்கான மூலங்களாகும். சுண்ணாம்பு மிகுந்த சிவப்பு களிமண் பொருள் எனவும் பர்னா அழைக்கப்படுகிறது, ஆத்திரேலியாவின் முர்ரம்பிட்கி, முர்ரே நதி பள்ளத்தாக்கு பகுதிகளை காற்றினால் படிந்த இவ்வண்டல் ஒரு போர்வையாக மூடியுள்ளது [3]

மேற்கோள்கள் தொகு

  1. Andrew Goudie (2013). Encyclopedia of Geomorphology. Routledge. pp. 762–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-48276-4.
  2. Butler,B.1956. Parna-an aeolian clay. Australian Journal of Science 18, 145-151, also Loess Letter 54, www.loessletter.msu.edu
  3. Cattle,S.R.,Greene,R.S.B.,McPherson,A.A. 2005. Aeolian dust deposition in south east Australia: impacts on salinity and erosion. crcleme.org.au/Pubs/Monographs/regolith2005/Cattle_et_al.pdf

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்னா&oldid=2631824" இலிருந்து மீள்விக்கப்பட்டது