பர்வானோ பாட்டி
பர்வானோ பாட்டி (Parwano Bhatti) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். முக்கிய சிந்தி மொழி கவிஞர் பத்திரிகையாளர்[1], நடிகர், வானொலி இசையமைப்பாள என பன்முகங்களால் இவர் அறியப்படுகிறார். 1934 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். தனது 82 ஆவது வயதில் இறந்தார்.[2]
பர்வானோ பாட்டி Parwano Bhatti | |
---|---|
பிறப்பு | மேவோ கான் பாட்டி 6 பிப்ரவரி 1934 |
இறப்பு | 1 திசம்பர் 2016 ஐதராபாத்து, பாக்கித்தான் |
பணி | கவிஞர், பத்திரிக்கையாளர் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகு1947 இல் பத்திரிகைத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1950 ஆம் ஆண்டில் தனது கவிதைகளை வெளியிடத் தொடங்கினார். முதன்முதலில் 1953 ஆம் ஆண்டில் மித்தா ராம் விடுதியில் முஜ்ரிம் கவுன்? என்ற மேடை நாடகத்தில் நடித்தார். 1963 ஆம் ஆண்டில் இவர் சிந்தி அதாபி சங்கத்தின் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1968 ஆம் ஆண்டில் இவரது முதல் புனைகதை படைப்பு வெளியிடப்பட்டது. 1970 ஆம் ஆண்டு ஏக்யூ பிர்சாதா இயக்கிய மெகபூப் மிதா திரைப்படத்தில் நிலப்பிரபுத்துவப் பிரபுவாக நடித்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Multi-talented individual: Sindhi actor, poet and journalist Parwano Bhatti dies – The Express Tribune". 1 December 2016.
- ↑ Aziz, Shaikh (3 December 2016). "Parwano Bhatti: a distressed soul".