பறவைகளின் கூர்ப்பு
பறவைகளின் கூர்ப்பு என்பது, வெகுகாலமாக பரிணாம உயிரியலில் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வந்துள்ளது. தற்பொழுது பெரும்பாலான அறிவியல் ஆய்வாளர்கள், பறவைகளாவன தொன்மாக்களில் இருந்து கூர்ப்படைந்த ஓர் உயிரியல் வகுப்பு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். இவை மிசொசோய்க் காலத்தில் உருவான ஒரு தொன்மாப் பிரிவெனவும் பல அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆர்கியோப்டைரிக்ஸ் என்ற பழங்கால வகைப் பறவையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இவை தொன்மாக்களில் இருந்தே கூர்ப்படைந்துள்ளன என்பது உறுதிசெய்யப்பட்டது. எனினும் இது தொடர்பான வாதங்கள் இன்னும் இடம்பெற்ற வண்ணமே உள்ளன.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Chiappe, Luis M. (2009). "Downsized Dinosaurs: The Evolutionary Transition to Modern Birds". Evolution: Education and Outreach 2 (2): 248–256. doi:10.1007/s12052-009-0133-4.
- ↑ Darwin, Charles R. (1859). On the Origin of Species by Means of Natural Selection, or the Preservation of Favoured Races in the Struggle for Life. London: John Murray. p. 502pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4353-9386-8.
- ↑ Christian Erich Hermann von Meyer (1861). "Archaeopteryx lithographica (Vogel-Feder) und Pterodactylus von Solnhofen" (in de). Neues Jahrbuch für Mineralogie, Geologie und Paläontologie 1861: 678–679.