பறவைகளும் வேடந்தாங்கலும்

பறவைகளும் வேடந்தாங்கலும் என்பது மா. கிருட்டிணன் எழுதிய பறவைகளைப் பற்றிய கட்டுரைகளைக் கொண்ட ஒரு கட்டுரை நூல். இதன் பதிப்பாசிரியர் பெருமாள்முருகன். இதில் பறவைகளைப் பற்றி சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியத்தில் இடம்பெற்ற 59 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்நூலில் மா. கி அவர்கள் வரைந்த சில பறவைகளின் ஓவியங்களும் புகைப்படங்களும் உள்ளன. வேடந்தாங்கல் பறவைகள் காப்பகத்தைப் பற்றிய சிறு நூலும் இதன் ஒரு பகுதியாகும். காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

பறவைகளும் வேடந்தாங்கலும்
நூல் பெயர்:பறவைகளும் வேடந்தாங்கலும்
ஆசிரியர்(கள்):மா. கிருட்டிணன்
வகை:பொது
துறை:கட்டுரைகள்
இடம்:காலச்சுவடு பதிப்பகம்,
669, கே. பி. சாலை,
நாகர்கோவில்-629 001.
* [1]
மொழி:தமிழ்
பக்கங்கள்:160
பதிப்பகர்:காலச்சுவடு பதிப்பகம்
பதிப்பு:திசம்பர்2010