பறவைகள் சாலை

பறவைகள் சாலை (Birds Road) என்பது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி, கண்டோன்மெண்ட், மேல்புதூர் பகுதியில் உள்ள சாலையாகும்.[1] இந்த சாலையானது பாரதிதாசன் சாலையையும் மதுரை பிரதான சாலையையும் செங்குத்தாக இணைக்கும்விதத்தில் உள்ளது.

வரலாறு

தொகு

திருச்சினோபோலி என்று கிழக்கிந்திய ஆட்சிக்காலத்தில் அழைக்கப்பட்ட, இன்றைய திருச்சிராப்பள்ளியில் குற்றவியல் நீதிபதியாக 1826இல் பதவியேற்று பணியாற்றினார் ஜான் பேர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரி. அந்த அதிகாரியின் நினைவாக அப்போது பேர்ட்’ஸ் ரோடு என்று பெயரிடப்பட்டிருந்தது. அந்தப் பெயரை பிற்காலத்தில் அப்படியே மொழிமாற்றம் செய்து தமிழில் பறவைகள் சாலை என்று அழைக்கப்பட்டு வருகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Birds Road, Melapudur, Cantonment". அறிமுகம். onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2018.
  2. முகமது ஹுசைன் (19 மே 2018). "பறவைகள் சாலையான ஜான் பேர்ட்'ஸ் சாலை". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பறவைகள்_சாலை&oldid=3577738" இலிருந்து மீள்விக்கப்பட்டது