பறையன் (இதழ்)
பறையன் இதழ் தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக [இரட்டைமலை சீனிவாசனால் 7 அக்டோபர் 1893 இல் தொடங்கப்பட்ட தமிழ் இதழாகும். இது மாதாந்தம் அப்போதைய சென்னை மாகாணத்தில் வெளிவந்தது. மாதப்பத்திரிக்கையாக தொடங்கப்பட்ட பறையன் ஒரு வருடத்தில் வார பத்திரிக்கையானது. இரட்டைமலை சீனிவாசன் தனது சுயசரிதையில் பத்திரிகை தொடங்கியதற்கான காரணத்தை இவ்வாறு கூறுகிறார். "1818-ம் வருஷம் இவ்வின குடியானவர்கள் முன்னேற்றமடைய வழிவகைகளைத் தெரிவிக்கும்படி கலெக்டர்களை ரெவினியுபோர்டார் கேட்டிருந்தார்கள், அது எப்படியாயிற்றென்று தெரியவில்லை. 1893-ம் வருடம் கல்வி கற்பித்து கொடுக்க தலெப்பட்டார்கள். 120 வருஷம் தூண்டுவாரற்று இருந்தார்கள், 1893-ம் வருடம் சர்க்கார் வெளியிட்ட உத்தரவை ஒரு சிலாசாசனமாய் இவ்வினத்தார்கள் எண்ணினாலும் பலிதபடாமல் போய்விட்டது. அதற்கடுத்த படியாகத்தான் 1893-ம் வருடம் "பறையன்" என்ற பத்திரிகையை தூண்டுகோலாக வெளியிட்டேன்."