பற்சில்லு
பற்சக்கரம் ஒரு அடிப்படை இயந்திர பாகமாகும். இது ஒரு சக்கரத்தையும் அதன் மீது பற்களையும் கொண்டது. ஒரு பல்சக்கரத்தின் பற்களும் வேறு ஒரு பற்சக்கரத்தின் பற்களும் பொருந்தி, ஒரு சில்லில் இருக்கும் இயக்க ஆற்றலை மற்ற பற்சக்கரம் பெறக்கூடியதாக அமைவதே பற்சக்கரத்தின் தொழிற்பாடுகளில் முக்கியமானது. பற்சக்கரம் கடிகாரம், மிதிவண்டி, பல்வேறு தானுந்து உறுப்புகள், மின்னோடிகள் உட்பட பல்வேறு இயந்திரங்களில் ஒரு பாகமாக இருக்கிறது.
பற்சக்கரத்தின் ஐந்து தொழிற்பாடுகள்:
- ஒரு பற்சக்கரம் மற்ற பற்சக்கரத்தோடு பொருந்தும் பொழுது இயக்க ஆற்றலை மற்ற பற்சக்கரத்திற்கு மாற்றுவது.
- ஒரு பற்சக்கரம் மற்ற பற்சக்கரத்தோடு பொருந்தும் பொழுது மற்ற பற்சக்கரத்தின் சுழற்சித் திசையை நேர்மாற்றுவது.
- ஒரு பற்சக்கரம் மற்ற பற்சக்கரத்தோடு பொருந்தும் பொழுது மற்ற பற்சக்கரத்தின் சுழற்சி வேகத்தை கூட்டுவது அல்லது குறைப்பது.
- ஒரு பற்சக்கரம் மற்ற அச்சு மாறிய பற்சக்கரத்துக்கு இயக்க ஆற்றலை தருவது ஆகும்.
- இரு பற்சக்கரங்களின் சுழற்சியை ஒருமைப்படுத்தி (synchronized) வைப்பது.
வெளிப்புற vs உள்ளக பற்சக்கரம்
தொகுவெளிப்புற பற்சக்கரம் என்பது ஒர் உருளை அல்லது கூம்பின் மேற்புறத்தில் பற்களை கொண்டிருக்கும். மாறாக உள்ளக பற்சக்கரம் என்பது உருளை அல்லது கூம்பின் உட்பகுதியில் பற்களை கொண்டிருக்கும். பேவெல் பற்சக்கரத்தின், உள்ளக பற்சக்கரத்தின் இரு அச்சுசாய்வுகளுக்கிடையே 90 பாகைக்கு மேலே இருக்கும். உள்ளக பற்சக்கர அமைப்பானது வெளிப்புற சுழல்தண்டின் திசையை மாற்றாது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ American Gear Manufacturers Association; American National Standards Institute, Gear Nomenclature, Definitions of Terms with Symbols (ANSI/AGMA 1012-G05 ed.), American Gear Manufacturers Association