பற்றவைத்தல்

(பற்ற வைப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பற்றவைத்தல் (Welding) என்பது ஒரு பொருளுடன் மற்றொரு பொருளை பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி ஒன்றிணைக்கும் செயலாகும். பற்றவைத்தல் வெப்பத்தின் மூலம் உருக்கப்பட்டடோ, அழுத்தத்தின் மூலமோ, நிரப்பி பொருள் மூலமோ அல்லது இவற்றின் கலவையாகவோ செய்யப்படுகிறது.

வாயு உலோக ஆர்க் பற்றவைப்பு

பற்றவைத்தலுக்கு பல்வேறு ஆற்றல் மூலங்கள் பயன்படுகின்றன. அவை வாயு சுடர், மின்சார ஆர்க், லேசர், மின்னணுக்கற்றை, உராய்வு, மீயொலி ஆகும். தொழிலக செயல்முறையின் போது பல்வேறு சூழ்நிலைகளில் பற்றவைக்கப்படுகிறது, அவை திறந்த, நீருக்குழ், விண்வெளி, காற்றில்லா சூழ்நிலை ஆகும். பற்றவைத்தல் உடலுக்கு தீங்கு விளையக்கூடிய பல இடர்களை விளைவிக்கக்கூடியது. பற்றவைத்தலில் விளையும் விஷ வாயுக்கள், புகை மற்றும் தீவிர புற ஊதாக்கதிரியக்கம் ஆகியவற்றின் மீது முன்னெச்சரிக்கை தேவை.[1][2][3]


பற்றவைப்பின் முக்கியத்துவம்

தொகு

தொழிற்சாலைகள் பெருகவும், உற்பத்தியளவு பல மடங்காக அதிகரிக்கவும் “பற்றவைப்பு” (welding) பெரிதும் இன்றியமையாதது. உலோகத்தாலான கட்டுமான வேலைகள் (fabrication) செய்யும் இடத்திலும், பழுது பார்க்கும் துறையிலும் (Repairing Metal products) பற்றவைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக, ஏதாவது ஒருவகைப் பற்றவைப்பை பயன்படுத்தாத சிறு தொழில் நிறுவனமோ, பெரிய தொழிற்சாலைகளோ இல்லை எனலாம். உலோகத்தாலான கட்டுமான வேலைகள் செய்யுமிடங்களில் திறமைமிக்க, நம்பக்கூடிய சிக்கனமான வழிகளில் உலோகங்களை ஒன்றுடன் மற்றொன்றை இணைக்க முடியும் என்று பொறியியல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

பெரிய கட்டிடங்கள், பாலங்கள், கப்பல் போன்றவை கட்டப்படும் இடங்களில் பற்றவைப்பு பெரிதும் பயன்படுகிறது. மோட்டார் வாகனம் ஊற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் பல லட்சக்கணக்கான மூலதனத்தில் பற்றவைப்பு இயந்திரங்களும், சாதனங்களும் பயன்படுகின்றன. ஆகாயவிமானம், ராக்கெட்டுகள் போன்றவற்றை உற்பத்தி செய்யவும், அவற்றை நவீனமாக்கவும் பற்றவைப்பு முறை பெரிதும் கைகொடுத்து வருகிறது.

வீட்டிற்கு வேண்டிய குளிர்சாதனப் பெட்டி, சமையலறை அடுக்குகள், மின் சாதனங்கள் போன்ற பலவற்றையும் செய்ய பற்றவைப்பு பயன்பட்டு வருகிறது. இவை தவிர விவசாயக் கருவிகள், டிராக்டர்கள், சுரங்கத் தொழிற் கருவிகள், எண்ணெய்த் தொழிற்சாலை இயந்திரங்கள், சிறப்புக் கருவிகள், பாய்லர்கள், அடுப்புகள், இரயில் பெட்டிகள் போன்ற ஏராளமானவற்றை உற்பத்தி செய்யும் இடங்களில் பற்றவைப்பின் தேவை இன்றியமையாததாகும். பொதுவாக பற்றவைப்பு செய்கையில், அதிக சப்தம் உண்டாவதில்லை. எனவே மருத்துவமனை போன்ற இடங்களில் நடக்கும் கடினமான வேலைகளுக்கு பற்றவைப்பு முறையில் இணைப்புகள் செய்தால் சப்தம் உண்டாகாது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமான பற்றவைப்பு வகைகள்

தொகு

தற்போது பயன்படுத்தப்படுகின்ற பலவேறு பற்றவைப்பு வகைகளில் வாயு பற்றவைப்பு (Gas Welding), மின்தீபற்றவைப்பு (Arc Welding), மின்தடைப் பற்றவைப்பு (Resistance Welding) போன்றவைகள் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

சரியான பற்றவைப்பு முறையைத் தேர்ந்தெடுத்தல்

தொகு

ஒரு குறிப்பிட்ட வேலைக்கு எந்த வகைப் பற்றவைப்பை பயன்படுத்த வேண்டுமென்ற வரையறை எதுவும் கிடையாது. பற்றவைக்கப்பட வேண்டிய உலோகங்கள், உருவாக்கப்படும் உருவத்தின் தன்மை, உற்பத்தி செய்யப்படும் நுணுக்கங்கள், தீர்மானிக்கப்பட்ட செலவு ஆகியவற்றைப் பொருத்துதான் தேவையான பற்றவைப்பு முறை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சிலவற்றிற்கு வாயு பற்றவைப்பு முறை ஏற்றதாகவும், சிலவற்றிற்கு மின்தீபற்றவைப்பு ஏற்றதாகவும் இருக்கலாம்.

“வாயு பற்றவைப்பு” பொதுவாக எல்லா தொழிற்சாலைகளிலும், பழுது பார்க்கும் இடங்களிலும் பயன்படுத்தபடுகிறது. வாயுக்கள், ஆல்ங்கிய சிலிண்டர்களை எளிதில் தள்ளுவண்டியில் வைத்து, எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பற்றவைக்கலாம். மேலும் அதே வாயுக்கள் கொண்டு “வாயு வெட்டு செய்தல்” (Gas Cutting), “பிரேசிங் செய்தல்” (Brazing), ‘உஷ்ணப்படுத்தி குணமாற்றம் செய்தல்’ (Heat Treatment) போன்றவைகளையும் செய்யலாம். இரும்புகலப்பற்ற செம்பு, பித்தளை, வெண்கலம் போன்ற உலோகங்களை நல்ல முறையில் சிறப்பாகப் பற்றவைக்கலாம்.

மின்தீபற்றவைப்பினால் (Arc Welding) குறைந்த செலவில் மிக வேகமாக சிறந்த பற்றவைப்பு செய்ய முடியும். கட்டிடங்கள், பாலங்கள், இயந்திரங்கள் பங்கேற்கிறது. எண்ணெய்க் கிடங்குகள், பாய்லர்கள் மற்றும் அழுத்தத்தைத் தாங்கும் பாத்திரங்களைப் பற்றவைக்க மின்தீபற்றவைப்பு மிகப் பொருத்தமானது. நவீன முறை மின்தீபற்றவைப்புகளால் இரும்பு கலந்த, இரும்பு கலப்பற்ற எல்லா வல்லுநர்கள் நிரூபித்திருக்கிறார்கள். ‘மின்தீ’ பற்றவைப்பானது வீட்டில் பயன்படும் சாமான்கள், மோட்டார் பகுதிகள், மின்சாதனங்கள், சிறு உலோகக் கருவிகள் போன்றவைகளை ஏராளமான அளவில் உற்பத்தி செய்யும் பெரும் தொழிற்சாலைகளில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.

பற்றவைப்பு வகைகள்

தொகு

(Basic Types of Welding)

பற்றவைப்பு என்பது உலோகங்களை வெப்பப்படுத்தி ஒன்றுடன் மற்றொன்றை இணைக்கும் முறையாகும். இணைக்கப்படும் இடத்தில் உலோகங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்துவிடுகிறது. உலோகங்களைப் பற்றவைப்பதில் இருபெரும் பிரிவுகள் உள்ளன.

  • பற்றவைக்கப்பட வேண்டிய உலோகபட பரப்புகளை வெப்பப்படுத்தி, உருகவைத்து, அழுத்தத்தை செலுத்தாமலேயே ஒன்றுடன் ஒன்று கலந்து இணைப்பு ஏற்படும்படி செய்தல் (Fusion Welding without pressure)
  • பற்றவைக்கப்பட வேண்டிய உலோகப் பரப்புகளை பிளாஸ்டிக் நிலைக்கு வெப்பப்படுத்தி, தேவையான அளவு அழுத்தம் கொடுத்து இணைப்பை ஏற்படுத்துதல் (Pressure Welding) பற்றவைக்கத் தேவையான உஷ்ணம் இந்து வழிகளில் உண்டாக்கப்படுகின்றது.
  • உலையில் உண்டாக்கப்படும் நெருப்பு (Fire)
  • வாயுக்களை கலந்து எரித்து உண்டாக்கப்படும் தீப்பிழம்பு (Gas Flame)
  • மின் தடையினால் உண்டாகும் வெப்பம் (Electric Resistance)
  • மின் தீ (Electric arc)
  • தெர்மிட் கலவையை எரிப்பதால் உண்டாகும் வெப்பம் (Thermit Mixture)

மேற்கோள்கள்

தொகு
  1. C. Brown, Walter; K. Brown, Ryan (2011). Print Reading for Industry, 10th edition. The Goodheart-Wilcox Company, Inc. p. 422. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-63126-051-3.
  2. An Etymological Dictionary of the English Language by Walter William Skeat -- Oxford Press 1898 Page 702
  3. A Concise Anglo-Saxon Dictionary by John R. Clark Hall, Herbert T. Merritt, Herbert Dean Meritt, Medieval Academy of America -- Cambridge University Press 1960 Page 289
"https://ta.wikipedia.org/w/index.php?title=பற்றவைத்தல்&oldid=4100614" இலிருந்து மீள்விக்கப்பட்டது