பலராம் நதி (Balaram River) என்பது குசராத் மாநிலத்தின் பனாசுகாண்டா மாவட்டத்தில் பாய்கின்ற ஒரு நதியாகும். தண்டிவாடா அணைக்கு 14 கிலோமீட்டர் முன்பாக பனசு ஆற்றுடன் இது கலக்கிறது. பலராம் நதிக்கரையில் பலராம் அரண்மனை அமைந்துள்ளது [1]. இந்த நதியை சூழ்ந்துள்ள சுற்றுப்புறம் முழுவதும் பலராம் அம்பாசி வனவிலங்கு சரணாலயம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

பலராம் நதி
பலராம் சிவன் ஆலயம்

பலராம் கோவிலும் இந்த நதியின் கரையிலே அமைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Balaram River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. பார்க்கப்பட்ட நாள் 24 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலராம்_நதி&oldid=2644968" இலிருந்து மீள்விக்கப்பட்டது