பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் -1


பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் -1 என்பது யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் நடத்திய முதலாவது தாக்குதலைக் குறிக்கும்.


பின்னணி

தொகு

1993 நவம்பரில், 'தவளைப் பாய்ச்சல்' என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பலுக்காகவும் படையினரின் வழங்கலை முடக்குவதற்காகவும் பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல்.


தாக்குதல்

தொகு

இத்தாக்குதலுக்கென முப்பது வரையான வீரர்களைக் கொண்ட அணி கடல்வழியாக நகர்ந்தது. கடலில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் அணி இரண்டாகப் பிரிந்து தளத்தினுள் ஊடுருவியது. இலக்கை அடைய முன்பே எதிரியினால் இனங்காணப்பட்டு அவ்வணிகள் தாக்குதலுக்கு உள்ளாயின. எதிர்பார்த்தபடி எதுவுமே நடைபெறாமல்போக, தப்பியவர்கள் தளம் திரும்பினர். இத்திட்டம் புலிகளுக்கு முற்றுமுழுதான தோல்வியாக முடிவடைந்தது.

இத்தாக்குதலில் புலிகளின் தரப்பில் 13 கரும்புலிகள் கொல்லப்பட்டனர்.