பலீன் திமிங்கிலம்

பலீன் திமிங்கலம் அல்லது பல்லற்ற திமிங்கலத்தின் முறையான பெயர் மிஸ்டிசெடி (mysticeti) ஆகும். இதற்கு எல்லா திமிங்கலங்களுக்கும் இருப்பது போன்று பல் இல்லாமல் அதற்கு பதில் தாடை எலும்புகளே பற்கள் போன்று அமைந்து செயல் படும். இது முன்பு திமிங்கல எலும்பு திமிங்கலம் என்று அழைக்கப் பட்டது. இது செடேசியே என்ற துணைக் குடும்பத்தில் (திமிங்கலவம், டால்பின் மற்றும் கடற்பன்றிகள்) ஒரு உள் குடும்பத்தை உருவாக்குகிறது. இவ்வகை திமிங்கலங்கள் உலகில் பரவலாக காணப் படுகிறது. மிஸ்டிசெடி பலீன்டியே குடும்பம்(ரைட் திமிங்கலம்), ப்லீனோப்டிரைடே(ரோர்குவல்ஸ்), ஸிடோதெரிடே(குள்ள ரைட் திமிங்கலங்கள்) மற்றும் எஸ்கிரிச்டிடே(சாம்பல் திமிங்கலம்) உள்ளடக்கியது. தற்போது பலீன் திமிங்கலத்தில் பதினைந்து இனங்கள் காணப் படுகின்றன. முப்பத்து நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பலீன் திமிங்கலங்கள் பல்லுள்ள திமிங்கிலங்களிலிருந்து பிரிந்து சென்றது. இவ்வகை திமிங்கிலங்கள் 20 அடி (6மீ) 3,000 கி.கி குள்ள ரைட் திமிங்கிலங்களிலிருந்து 112 அடி (34மீ) 210 டன் எடை கொண்ட நீலத் திமிங்கலம் வரை அடங்கும். இந்த நீலத் திமிங்கலம் உலகின் மிகப் பெரிய விலங்காகும். இவைகள் இருநிலை வளர்ச்சி பாலினம் கொண்டதாகும். இவைகளின் உணவு வழக்கத்திற்கு ஏற்றாற் போல் இவற்றின் உடலமைப்பு கதிர் வடிவம் கொண்டதாகவோ(நெறி படுத்தப் பட்ட) அல்லது மிகப் பெரிய உடல் அமைப்பு கொண்டதாகவோ இருக்கும். இவற்றின் இரு பக்கவாட்டு அல்லது கை போன்ற உறுப்புகள் துடுப்புகளாம மாறி செயல் படுகின்றன. இவைகளின் சீல் விலங்கின் உடலமைப்பு போல நெகிழ்வாக வளைந்து கொடுக்கும் தன்மை மற்றும் சுறுசுறுப்பான தன்மை கொண்டதாக இல்லாவிட்டாலுமிவைகளும் மிக வேகமாக நீந்தும் தன்மை கொண்டவை தான். இவைகளின் அதி வேகம் ஒரு மணிநேரத்துக்கு 23 கி.மீ ஆகும். இவைகள் தங்களின் பல்போன்று செயல் படும் தாடை எலும்புகளின் உதவியோடு தன் உணவை வடி கட்டி உண்ணும் அல்லது அவற்றை குழைமம் போல் ஆக்கி உண்ணும். இவற்றின் கழுத்து முள்ளெலும்புகள் ஒன்றொடொன்று இணைந்து காணப்படும் எனவே இவைகளால் இவற்றின் தலையைத் திருப்பவே முடியாது. இத்திமிங்கலங்கள் இரண்டு ஊது புரைகள் அல்லது துளைகள் கொண்டது. சில இனங்கள் கடலின் அடியில் மிக ஆழத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இவகளின் தோலுக்கு அடியில் கொழுப்பு அடுக்குகள் கொண்டுள்ளது. இந்த கொழுப்பு திமிங்கலங்கள் மிகக் குளிர்ந்த கடல் நீரிலும் உயிர் வாழ உதவி செய்கிறது.

இத்திமிங்கலங்கள் உலகம் முழுவதும் காணப் பட்டாலும் இவை வட மற்றும் தென் துருவங்களின் குளிர் மிகுந்த கடல் நீரில் வாழ்வதையே விரும்புகின்றன. சாம்பல் திமிங்கலங்கள் கடலின் ஆழத்தில் வாழும் ஒட்டு மீன்களை சாப்பிடுவதில் சிறந்தவைகள். ரார்க்யூவல்ஸ் உணவை வடி கட்டி உண்பதில் தேர்ந்தவை. மேலும் இவற்றின் உடல் கதிர் வடிவத்தில் நெறி படுத்தப் பட்டு இருப்பதால் இவைகள் வேகமாக நீந்தும் போது தங்கள் உடலை இழுத்துக் கொண்டு செல்ல வேண்டியதில்லை. இவைகளின் உடல் எடை மற்றும் அமைப்பு நீந்துவதற்கு தடையாக இருப்பதில்லை. ரைட் திமிங்கலங்கள் தங்களின் மிகைப் படுத்தப் பட்ட தலை அமைப்பினால் தங்கள் இரையை விழுங்கும் தன்மை உடையவை அப்பொழுது அகப்படக் கூடிய சிறு இரைகளை அவைகள் வடிக் கட்டி விடும். ஆண் திமிங்கலங்கள் பொதுவாக அநேகம் பெண் திமிங்கலங்களோடு கூடும் தன்மையுடையவை. இந்த பல்லிணைச் சேர்க்கை இனத்திற்கு இனம் மாறுபடும். ஆண் திமிங்கலங்களின் இணை சேரும் தந்திரமானது திமிங்கல நடனத்திலிருந்து இணைசேருவதற்கான விசேஷித்த விளையாட்டு வரை மாறுபடும். ஆண்களின் வெற்றி இதை பொறுத்தே காணப் படும். இவற்றின் கன்றுகள் பொதுவாக குளிர் காலங்கள் அல்லது வசந்த காலங்களில் பிறக்கும். தன் கன்றுகளை வளர்க்கும் பொறுப்பை பெண் திமிங்கலங்கள் பொதுவாக ஏற்றுக் கொள்ளும். திமிங்கல தாயானது வலசை போகும் நேரம் நீண்ட காலத்திற்கு உண்ணாவிரதம் இருக்கும். இந்த காலம் இனத்திற்கு இனம் மாறு படும். இவைகள் அநேக வகையில் சத்தமிடும் மற்றும் பாடும் அவற்றில் கூன் முதுகு திமிங்கலத்தின் பாடல் சிறந்தது.

வகைப்பாட்டியல்

தொகு

இவைகள் செடஸியன்ஸ் (திமிங்கலம்). உள்வகைப்பாடாகிய மிஸ்டிசெடியில் வகைப்படுத்தப் பட்டுள்ளது. இதன் அடியில் நான்கு விரிவான குடும்பங்கள் காணப்படுகிறது. அவையான மிஸ்டிசெடி பலீன்டியே குடும்பம்(ரைட் திமிங்கலம்), ப்லீனோப்டிரைடே(ரோர்குவல்ஸ்), ஸிடோதெரிடே(குள்ள ரைட் திமிங்கலங்கள்) மற்றும் எஸ்கிரிச்டிடே(சாம்பல் திமிங்கலம்) ஆகும். பலன்டீயன் திமிங்கலங்கள் அவற்றின் பெரிய தலை மற்றும் அடர்த்தியான கொழுப்பு மூலம் தனித்து அறியப்படுகிறது. அதே வேளையில் ரார்குயூவல்ஸ் மற்றும் சாம்பல் திமிங்கலங்கள் தட்டையான தலை, நீண்ட தொண்டை மடிப்பு மற்றும் பலீன்டியன் திமிங்கலங்கள் விட நெறிபடுத்தப் பட்ட கதிர்வடிவமைப்பு கொண்டவை. ரார்குயூவல்ஸ் சாம்பல் திமிங்கலத்தை விட பெரியது.

[1]

திமிங்கல குடும்பங்களுக்கு இடையே வேறுபாடு

தொகு
 
Baleen whales vary considerably in size and shape, depending on their feeding behavior.

ரார்குயூவல் திமிங்கலங்கள் தங்கள் தொண்டை மடிப்பை தங்கள் வாயை விரிவாக திறக்க உபயோகிக்கின்றன. இது அவைகள் அதிக அளவு இரையை உட்கொள்ள உதவுகின்றன. ஆனால் இவைகள் தங்கள் வாயை விரிவாய் திறக்க நீர் அழுத்தத்தை உப்யோகிக்க வேண்டியுள்ளது. இவைகள் தங்கள் வாயை விரிவாய் திறப்பதால் அதிக அளவு நீர் உள்ளே சென்று வடிகட்டும் முறையில் தங்கள் பற்கள் போன்ற தாடை எலும்புகளால் உணவை தக்க வைத்து உண்கின்றன. இந்த முறையில் திமிங்கலங்கள் ஒரு சிறு மீன் கூட்டத்தை அப்படியே விழுங்கி விடும். ரார்குயூவல் திமிங்கலங்களுக்கு இந்த பணியை விரைவாக செய்வதற்கு ஏற்றவாறு நெறி படுத்தப் பட்ட உடல் அமைப்பு காணப்படுகிறது. அதே வேளையில் பலீன் திமிங்கலங்கள் தங்கள் இரையைப் பிடிக்க தங்கள் பெரிய தலையை சார்ந்து உள்ளது. இந்த முறை உணவூட்டம் இவர்களின் உடம்பை பெரியதாகவும் பருமனாகவும் ஆக்குகிறது. இவைகளுக்கு கட்டான நெறி படுத்தப் பட்ட உடல் அமைப்பு தேவையில்லை. மற்ற திமிங்கலங்கள் போல் அல்லாமல் இவைகளின் தோல் தடிமனாக இருக்கும். பெருவாய் திமிங்கல்த்திற்கும் தோல் தடித்தே காணப் படும். இவைகளுக்கு மிக அதிக அளவில் தசை திசுக்கள் உண்டு ஆகவே ஏறக்குறைய இவைகள் எதிர்மறையான மிதக்கும் தன்மை கொண்டதாகக் காணப் படுகிறது. ஆனால் இவைகளுக்கு எதிர்மறையாக ரைட் திமிங்கலங்கள் அதிக அளவு திமிங்கல கொழுப்பைக் கொண்ட்ள்ளன எனவே இவைகளின் மிதக்கும் தன்மை அதிகம். சாம்பல் திமிங்கலங்கள் அவைகளின் எஃகு சாம்பல் வண்ணம், முதுகுப் புற முகடு மற்றும் நுண்ணுயிரிகளால் ஏற்படுத்தப் பட்ட வெள்ளை நிற தழும்புகளால் விரைவில் அடையாளம் காணப்படும். ரார்குயுவல் திமிங்கலங்கள் தங்கள் தொண்டை மடிப்பு மூலம் நீரை உறிஞ்சி இரையை உண்ணும் போது இந்த சாம்பல் திமிங்கலங்கள் கடலின் அடிப்பாகம் வரை சென்று மணலில் தங்கள் இரையைத் தேடும். இரை தேடும்போது இவைகள் பொதுவாக தங்கள் பக்கவாட்டில் திரும்பி கடலடியில் படிந்துள்ள படிமங்கள் ஊடாகச் சென்று நீரின் அடிப்பகுதியில் வாழும் தன்மையுடைய கடலுயிரிகளை விசேசமாக நீர்நில வாழும் நண்டு போன்ற சிறு உயிரிகளை வடிகட்டி விட்டு மற்ற பெரிய உயிரிகளைச் சாப்பிடும். இவைகள் இப்படித் தங்கள் தலையை உபயோகித்து உணவு தேடுவதால் இவைகளின் தலையில் நன்கு தெரியக் கூடிய அளவு குறி காணப் படும்.[2] குள்ள ரைட் திமிங்கலமும் மிங்கி திமிங்கலமும் அவைகளின் ஒத்த அளவு, அடர் சாம்பல் நிற முதுகு, வெளிர் சாம்பல் நிற வயிறு மற்றும் கண்ணில் காணப்படும் பட்டை போன்றவற்றால் அடிக்கடி ஒன்றை மன்றொன்றாக கருதும் குழப்ப நிலையை உருவாக்கும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Gatesy, J. (1997). "More DNA support for a Cetacea/Hippopotamidae clade: the blood-clotting protein gene gamma-fibrinogen". Molecular Biology and Evolution 14 (5): 537–543. doi:10.1093/oxfordjournals.molbev.a025790. பப்மெட்:9159931. https://archive.org/details/sim_molecular-biology-and-evolution_1997-05_14_5/page/537.  
  2. Jones, Mary Lou; L. Swartz, Steven; Leatherwood, Stephen, eds. (1984). "A Review of Gray Whale Feeding Ecology". The Gray Whale: Eschrichtius robustus. pp. 33–34, 423–424. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-389180-8. 
  3. Bannister 2008, p. 80.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலீன்_திமிங்கிலம்&oldid=3978497" இலிருந்து மீள்விக்கப்பட்டது