பல்குளோரினேற்ற டைபீனைல் ஈதர்கள்
பல்லாலசனேற்ற சேர்மங்கள்
பல்குளோரினேற்ற டைபீனைல் ஈதர்கள் (Polychlorinated diphenyl ethers) என்பவை கட்டமைப்பில் பல்குளோரினேற்ற பைபீனைல்களை ஒத்துள்ளன. இவ்விருவகைச் சேர்மங்களும் நச்சுத்தன்மை கொண்ட பல்லாலசனேற்ற சேர்மங்களாகக் கருதப்படுகின்றன. ஓரின பல்குளோரினேற்ற டைபீனைல் ஈதர்களில் சில ஆர்த்தோ பதிலீடு பல்குளோரினேற்ற பைபீனைல்கள் அல்லாத சேர்மங்களைப் போல நச்சு எதிர்வினைகளை வெளிப்படுத்துகின்றன. இவ்விரண்டுக்கும் இடையில் அரைல் ஐதரோகார்பன் ஏற்பி செயல்படுகிறது[1].