பல்சார்பேட்டு

வேதிச்சேர்ம வகை

பல்சார்பேட்டுகள் (Polysorbates) என்பவை சில மருந்துகள் மற்றும் உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பால்மமாக்கிகள் ஆகும். பெரும்பாலும் அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்த அத்தியாவசிய எண்ணெய்களை நீர் சார்ந்த பொருட்களில் கரைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. சார்பிட்டாலின் வழிப்பெறுதியான எத்தாக்சிலேற்ற சார்பிட்டனை கொழுப்பு அமிலங்களுடன் சேர்த்து எசுத்தராக்கம் செய்து பெறப்பட்ட எண்ணெய் திரவங்களே பாலிசார்பேட்டுகள் எனப்படுகின்றன. சுகேடிக்சு, அல்கெசுட்டு, கனார்செல் உள்ளிட்டவை பல்சார்ர்பேட்டுகளின் பொதுவான வணிகப்பெயர்களாகும். [1]

சில புட்டு கலவைகளில் உணவு சேர்க்கையாக பயன்படுத்தப்படும் பல்சார்பேட்டு 60

எடுத்துக்காட்டுகள்

தொகு
  • பல்சார்பேட்டு 20 (பல்லாக்சியெத்திலீன் (20) சார்பிட்டன் ஒற்றைலாரேட்டு
  • பல்சார்பேட்டு 40 (பல்லாக்சியெத்திலீன் (20) சார்பிட்டன் ஒற்றைபால்மிடேட்டு
  • பல்சார்பேட்டு 60 (பல்லாக்சியெத்திலீன் (20) சார்பிட்டன் ஒற்றைசிடீயரேட்டு
  • பல்சார்பேட்டு 80 (பல்லாக்சியெத்திலீன் (20) சார்பிட்டன் ஒற்றைஒலியேட்டு

பல்லாக்சியெத்திலீனைத் தொடர்ந்து வரும் 20 என்ற பகுதி இம்மூலக்கூறிலுள்ள மொத்த ஆக்சியெத்திலீனின் (-(CH2CH2O)-) குழுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். பல்சார்பேட்டு பகுதியைத் தொடர்ந்து வரும் எண் மூலக்கூறின் பல்லாக்சியெத்திலீன் சார்பிட்டனுடன் தொடர்புள்ள கொழுப்பு அமிலத்தின் வகையைக் குறிக்கிறது. ஒற்றைலாரேட்டு 20 என்ற எண்ணாலும், ஒற்றை பால்மிடேட்டு 40 என்ற எண்ணாலும், ஒற்றை சிடீயரேட்டு 60 என்ற எண்ணாலும், ஒற்றை ஒலியேட்டு 80 என்ற எண்ணாலும் குறிப்பிடப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Hubert Schiweck, Albert Bär, Roland Vogel, Eugen Schwarz, Markwart Kunz, Cécile Dusautois, Alexandre Clement, Caterine Lefranc, Bernd Lüssem, Matthias Moser, Siegfried Peters "Sugar Alcohols" Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2012, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a25_413.pub3

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்சார்பேட்டு&oldid=3004181" இலிருந்து மீள்விக்கப்பட்டது