பல்பகுதியப் பொறியியல்
பல்பகுதியப் பொறியியல் (Polymer Engineering) என்பது பல்பகுதியப் பொருட்களின் வடிவமைப்பு, மூலக்கூறுகள், பயன்பாடு ஆகியவற்றை முழுவதுமாக ஆராய்ந்து படிக்கும் பொறியியல்துறையாகும். பொருளறிவியல் துறையில் வெகுவேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்று பல்பகுதியப் பொறியியல் துறையாகும். வேகமாக அதிகரிக்கும் பாலிமரின் உற்பத்திக்கேற்ப, பணிபுரிபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாலிமர்களை உற்பத்தி செய்வது மற்றும் பயன்படுத்துவது ஆகியவற்றில் கெமிக்கல் பொறியியலின் கோட்பாடுகளையும் விதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக தொழிற்சாலை வடிவமைப்பு, முறைமை வடிவமைப்பு, வெப்ப இயக்கவியல், போக்குவரத்து அம்சங்கள் ஆகிய கோட்பாடுகள் இத்துறை நிபுணர்களால் ஆராயப்படுகின்றன.