பல்லமகாதேவி

பல்லமகாதேவி (Ballamahadevi) (இறப்பு 1285) அலுபா வம்சத்தின் ராணி ஆட்சியாளராக இருந்தார்.[1]

இவர் மனபாரநேஸ்வரர் குடும்பத்தில் பிறந்தார். இவர் மன்னர் வ்லராபந்திதேவாவை மணந்தார். 1275-ஆம் ஆண்டில் இவர் விதவையாகிவிட்டார். இவர் தனது இளம் மகன் மன்னர் நாகதேவராசாவுடன் இணைந்து அரியணை ஏறினார். இவர் தனது உரிய வயது பெறாத மகனின் ஆட்சிக்காலத்தின் போது வெறுமனே ஆட்சியாளராக இருக்கவில்லை-கல்வெட்டுகள் அவர் தனது கணவருக்குப் பிறகு தனது சொந்த உரிமையில் ஒரு முழு ஆட்சியாளராக இருந்ததாகவும், இவரது மகனின் இணை மன்னராக இருந்ததாகவும் தெளிவாகக் கூறுகின்றன.

இவர் மகாராஜாதிராஜா என்ற ஆண் பட்டத்தையும், அலுபாக்கள் பயன்படுத்திய அனைத்து இறையாண்மை பட்டங்களையும் பயன்படுத்தினார். 1277 ஆம் ஆண்டின் ஒரு கல்வெட்டு, ராணி நீருவர-பகவதி தேவிக்கு பரிசுகளை வழங்கியதாக பதிவு செய்கிறது. இவர் தனது அனைத்து அமைச்சர்களுடனும் (சமஸ்தா-பிரதானரு), தேசி-புருஷர்கள், பஹத்தாரா-நியோகிகள் மற்றும் பூசாரிகளுடன் பராகன்யபுரத்தில் உள்ள தனது பிரதான அரண்மனையிலிருந்து ஆட்சி செய்தார்.

குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லமகாதேவி&oldid=3937215" இலிருந்து மீள்விக்கப்பட்டது