பல்லிருகீட்டோயீனமீன்

பலபடியின் வகை

பல்லிருகீட்டோயீனமீன் (Polydiketoenamine) 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பலபடியாகும். இதை பாலிகீட்டோயீனமீன் என்றும் பி.டி.கே என்று சுருக்கமாகவும் அழைப்பர். செயல்திறன் இழப்பின்றி இப்பலபடியை மீண்டும் மீண்டும் மறுசுழற்சி செய்யலாம். லாரன்சு பெர்க்லி தேசிய ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் பி.டி.கே பலபடியை இயற்கை வேதியியலுடன் சேர்த்து ஆய்வு செய்து 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆய்வின் முடிவுகளை வெளியிட்டனர்.[1] ஓர் அமிலக் கரைசலில் மூழ்கியிருக்கச் செய்தால் பலபடி அதன் அசல் ஒருமங்களாக உடைகிறது. சேர்க்கைப் பொருள்களிலிருந்து இவ்வொருமங்கள் தனியாகப் பிரிகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Peter R. Christensen; Angelique M. Scheuermann; Kathryn E. Loeffler & Brett A. Helms. "Closed-loop recycling of plastics enabled by dynamic covalent diketoenamine bonds". nature.com. Springer Nature Publishing AG. பார்க்கப்பட்ட நாள் 16 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லிருகீட்டோயீனமீன்&oldid=3073519" இலிருந்து மீள்விக்கப்பட்டது