பல்லூடகம் வழி கற்றல்

பல்லூடகமும் கற்றலும்

தொகு

பல்லூடகம் என்பது கேட்டல்,பார்த்தல், வாசித்தல், பேசுதல், எழுதுதல் ஆகிய அனைத்திற்கும் உதவும் வகையிலான வடிவமைப்பைக்கொண்ட கருவி ஆகும். கணினி என்னும் கருவியும் மேற்கூறிய அனைத்தையும் செய்வதற்கு உதவும் கருவியாக இருப்பதால் பல்லூடகம் வழி கற்றல்  என்பதை கணினி வழியாகக் கற்பது என்றும் கூறுவர். இங்கே பல்லூடகம் வழியாகக் கற்றல்  எனக் குறிக்கப்படுவது கணினி இயந்திரத்தின் வழியாக மென்பொருட்களைப் பயன்படுத்திக் கற்பது ஆகும்.

  கணினியில் ஒலி – ஒளி பட இயக்கம், வரைகலை, உரை முதலிய ஊடகங்களை ஒருங்கிணைத்துப் பயன்படுத்துத இயலும்  என்பதால்  கணினியில் காணவும், கேட்கவும் வரையவும் படிக்கவும் எழுதவும் இயலுகிறது.

   கற்பித்தலில் எழுத்தட்டைகள், சொல்லட்டைகள், விளக்க அட்டைகள், பொருத்து அட்டைகள், சுழலட்டைகள், மின்னட்டைகள், வானொலி, ஒலி – ஒளி நாடாக்கள், தொலைக்காட்சி, தலைமேல் வீழ்த்தி, நழுவங்கள், திரைவீழ்த்திகள், முப்பரிமாணங்கள், இயக்கும் மாதிரிகள், உண்மைப்பொருள்கள் எனப் பல்வகைத் துணைக் கருவிகள் கற்பித்தலுக்குப் பயன்படுத்தினர். இவையனைத்தையும் பல்லூடகத்தின் வாயிலகச் செய்துவிட இயலும். சிறப்பான கற்பித்தலுக்குப் பல்லூடகப் பயன்பாடு பெரிதும் உதவும். ஆசிரியர் கணினிப் பயிற்சிப் பெற்றுக் காலத்திற்கேற்பக் கருவிகளைப் பயன்படுத்திக் கற்பித்தல் வேண்டும்.  குழந்தைகள்  எழுதும் போக்குகளையும் அவற்றிற்கான ஒலிகளையும் இயக்கத்தோடு காண்பதற்கான வாய்ப்புள்ளதால் மழலைக் கல்வி முதல் பல்லூடத்தைப் பயன்படுத்தலாம். குழந்தைகள் கணினியை இயக்கித் தானே கற்பதனால் கற்றல் விரைவாக நடைபெறுகிறது. ஆசிரியர் வழிகாட்டியாக இருந்து தேவையான கற்றல் பொருள்களையும் மென்பொருள்களையும் வகுப்பு நிலைக்கேற்ப கொடுத்தால் போதும். ஐயமேற்படும் இடங்களில் காரணக் காரியத்தோடு விளக்கினால் குழந்தைகள் எளிதாகக் கற்றுக் கொள்வர்.

கட்டுரைக்கு உதவிய புத்தகங்கள்:
தொகு

 1. ஆண்டோ பீட்டர் மா., “தமிழும் கணிப்பொறியும்”, சாப்ட்வியூ பப்ளிகேஷன்ஸ்,

118,நெல்சன் மாணிக்கம் சாலை, அமைந்தகரை, சென்னை- 600029, நான்காம் பதிப்பு,

ஜூலை 2011.

2. சந்தானம் எஸ், “கல்விக்கோட்பாடுகளும் தத்துவங்களும்”, பழனியப்பா பிரதர்ஸ்,

சென்னை- 600014, இரண்டாம் பதிப்பு 1976.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லூடகம்_வழி_கற்றல்&oldid=3599647" இலிருந்து மீள்விக்கப்பட்டது