பல்விந்தர் கௌர் ஷெர்கில்

கனடாவில் உள்ள சீக்கிய சமூகத்தின் முக்கிய உறுப்பினரும், மனித உரிமை ஆர்வலரும், ஷெர்கில் அண்டு கம்பெனி என்னும் பெயரில் கனடா நாட்டில் சட்டம் சம்பந்தப்பட்ட சேவைகளை வழங்கி வருபவரும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டவருமான பல்பிந்தர் கவுர் ஷெர்கில் வணிக மற்றும் சிவில் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவராவார். சீக்கிய மரபுப்படி தலைப்பாகை அணிந்து வழக்குகளில் வாதாடிய இவர், 2017 ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று கனடா நாட்டின் உச்ச நீதிமன்றம் நீதிபதியாக நியமிக்கப்பட்டதின் படி, கனடாவின் முதல் இந்திய வம்சாவளி பெண் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார். [1]

பல்பிந்தர் கவுர் ஷெர்கில்
பிறப்புபல்பிந்தர் கவுர் ஷெர்கில்
ருர்கா கலான், பஞ்சாப், இந்தியா
இருப்பிடம்கனடா
தேசியம்இந்தியன்
பணிநீதிபதி
பணியகம்கனேடிய உச்ச நீதிமன்றம்
அறியப்படுவதுகனடாவின் முதல் இந்திய வம்சாவளி பெண் நீதிபதி
சமயம்சீக்கியர்

தொழில்

தொகு

முன்னணி மனித உரிமை வழக்கறிஞராக இருந்த இவர், பள்ளிகளில் கிர்பான் (சடங்கு கத்தி) அணிவதற்கான சீக்கிய மாணவர்களின் உரிமையைக் கையாளும் வழக்கு உள்பட பல்வேறு அரசியலமைப்பு உரிமைக்கான வழக்குகளில் வாதாடியுள்ளார். மேலும் சமூக சேவைக்கான ராணியின் பொன்விழா பதக்கத்தைப் பெற்ற இவர், 2012 ஆம் ஆண்டில் ராணியின் வழக்கறிஞராகவும் பணிபுரிந்துள்ளார். [2]

பள்ளிகளில் கிர்பான் (சடங்கு கத்தி) அணிவதற்கான சீக்கிய மாணவர்களின் உரிமையைக் கையாளும் வழக்கு உட்பட மதச் சுதந்திரத்தைக் கையாளும் அம்செலெம், முல்தானி எதிர் கமிஷன் ஸ்கொலேர், பள்ளிகளில் சீக்கிய மாணவர்கள் கிர்பான் அணியும் உரிமையையும், லயோலா உயர்நிலைப் பள்ளி வி கியூபெக் (அட்டர்னி ஜெனரல்) கத்தோலிக்க கண்ணோட்டத்தில் மாகாண நெறிமுறைகள் மற்றும் மத கலாச்சார பாடத்திட்டத்தை கற்பிப்பதற்கான கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியின் உரிமை போன்ற கனடாவின் உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட பல முக்கிய வழக்குகளில் டபிள்யூ.எஸ்.ஓ மற்றும் கனேடிய சீக்கிய சமூகத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். கனேடிய சீக்கிய சமூகத்திற்கான இவரது தன்னார்வப் பணிகளைத் தவிர, பி.சி.யின் விசாரணை வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஆளுநராகவும், 2002 முதல் 2008 வரை பிரேசர் சுகாதார ஆணைய வாரியத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். கனேடிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தேசிய நிர்வாக சட்டப் பிரிவின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். [3]

குடும்பம்

தொகு

இவர், தனது கணவர், மகள் மற்றும் இரட்டை மகன்களுடன் சர்ரேயில் வசித்து வருகிறார்.


மேற்கோள்கள்

தொகு
  1. "கனேடிய சீக்கிய நீதிபதி பல்பிந்தர் கவுர் ஷெர்கில்".
  2. "கனடாவில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் சீக்கிய பெண் என்ற பெருமையை பெற்ற பல்பிந்தர் கவுர் ஷெர்கில்".
  3. "பல்பிந்தர் கே ஷெர்கில்".